தென்னாப்பிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர் 5 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை ஏற்படுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
இந்த போட்டியில் கேப்டன் டீன் எல்கர் 68 பந்துகளை சந்தித்து 26 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 81 டெஸ்ட் மற்றும் 142 இன்னிங்ஸ்களில் அவர் 5,002 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரது சராசரி 38.18 ரன்னாக உள்ளது. டெஸ்டில் மொத்தம் 13 சதம் மற்றும் 22 அரைச் சதங்களை கடந்துள்ளார் எல்கர்.
‘இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும்’ – வாசிம் ஜாபர் நம்பிக்கை
தென்னாப்பிரிக்க அணியில் டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் எல்கர் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் ஜாகஸ் கல்லீஸ் உள்ளார். 165 டெஸ்டில் விளையாடிய அவர் 13,206 ரன்களை எடுத்திருக்கிறார். சராசரி 55.25. இவற்றில் 45 சதம் மற்றும் 58 அரைச் சதங்கள் அடங்கும்.
அடுத்தடுத்த இடங்களில் ஹசிம் ஆம்லா (9,282), கிரேம் ஸ்மித் (9,253), ஏபி.டிவில்லியர்ஸ் (8,765), கேரி கிர்ஸ்டன் (7,289), ஹெர்ஷல் கிப்ஸ் (6,167), மார்க் பவுச்சர் (5,498) ஆகியோர் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் பங்கேற்பதில் சந்தேகம்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி 2ஆவது டெஸ்டிலும் தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, South Africa