Home /News /sports /

மூன்றாவது டெஸ்ட்டில் வென்று தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா

மூன்றாவது டெஸ்ட்டில் வென்று தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்க வீரர்கள்

தென்ஆப்பிரிக்க வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்கா அணி தொடரை வென்றது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பு இந்திய அணியின் முன்னே இருந்தது. ஆனால், அது தவறவிடப்பட்டுள்ளது. தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் கோலி மட்டும் பொறுப்பாக ஆடிய நிலையில், 10 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பன்ட் மட்டும் பொறுப்புடன் விளையாடி 100 ரன்களைக் குவித்தார்.

    கடினமான பந்து வீச்சில் ரிஷப் பண்ட் சபாஷ் அரைசதம்


    இந்திய அணி 198 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. அதனையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென்ஆப்பிரிக்கா அணி 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி