INDvSA 3rd T20.... தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி... தொடர் சமனில் முடிந்தது

Vijay R | news18-tamil
Updated: September 22, 2019, 10:14 PM IST
INDvSA 3rd T20.... தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி... தொடர் சமனில் முடிந்தது
INDvsSA
Vijay R | news18-tamil
Updated: September 22, 2019, 10:14 PM IST
இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக தவான், ரோஹித் களமிறங்கினர். ரோஹித் 9 ரன்னில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் 9 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தவான் மட்டும் அதிரடியாக விளையாடி 36 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.


இந்திய அணியின் மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன்  தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஹென்டிரிக்ஸ், கேப்டன் டி-காக் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறவிட்டனர். ஹென்டிரிக்ஸ் 28 ரன்களில் அவுட்டாகினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய டி-காக் அரைசதம் அடித்தார்.



இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் டி-காக் 79 ரன்களுடன் கடைசி வரை களத்தில் அதிரடி காட்டினார். இந்த வெற்றியின் மூலம் 1-1 என தொடர் சமனில் முடிந்தது.

Also Watch

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...