SLvSA | இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி!

ICC World Cup 2019 | Srilanka vs SouthAfrica | கேப்டன் டி-பிளசிஸ் - ஹாசிம் அம்லா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது.

Vijay R | news18
Updated: June 28, 2019, 10:12 PM IST
SLvSA | இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி!
SLvSA
Vijay R | news18
Updated: June 28, 2019, 10:12 PM IST
இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை தொடரின் 35வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்ட நிலையில் இலங்கை அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாகும். இலங்கை அணி வீரர்கள் இன்றயை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.


ஆனால் இலங்கை அணியின் தொடக்கமே மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் கருணரத்னே முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் பெர்னான்டோ - பெரேரா ஜோடி நிதனமாக விளையாடினர்.



இந்த ஜோடியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. பெர்னான்டோ, பெரேரா இருவரும் 30 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினர். பின்வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் இலங்கை அணி ரன்குவிக்க முடியாமல் தடுமாறியது.

இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில்அனைத்து விக்கெட்களையும் இழந்து 203  ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டி-காக், ஹாசிம் அம்லா களமிறங்கினர்.

டி-காக் 15 ரன்கள் எடுத்திருந்த போது மலிங்கா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் டி-பிளசிஸ் - ஹாசிம் அம்லா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறவிட்ட தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தோல்வி அடைந்ததால் அரையிறுதி சுற்றுக்குள் எளிதாக முன்னேறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...