ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சஞ்சு ஆட்டம் வீண்: த்ரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

சஞ்சு ஆட்டம் வீண்: த்ரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா வெற்றி

3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி வரும் 9ம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

  தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

  லக்னோவில்  நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன் படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கியது தொடக்க வீரர் மலான் 22 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கேப்டன் பவுமாவும் 8 ரன்களில் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

  நிதானமாக விளையாடிய விக்கெட் கீப்பர் டி காக் 48 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். 110 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா அணி, பின்னர் ஹென்ரிச் கால்சானும் டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தில் அணியின் ரன்களை உயர்ந்தது. இறுதியில் 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டை இழந்து 249ரன்களை சேர்ந்தது. ஹென்ரிச் கால்சான் 74 ரன்களும், டேவிட் மில்லர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  இதையும் படிங்க:77 பந்துகளில் 205 ரன்கள்... டி20-ல் இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

  இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, ஷூப்மான் கில் 3 ரன்னிலும், கேப்டன் ஷிகர் தவான் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்களும், இஷான் கிஷன் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்த கையோடு பெவிலியன் திரும்பினார். பின்னர் சஞ்சு சாம்சன்-ஷர்துல் தாக்கூர் ஜோடி நெருக்கடிக்கு மத்தியில் சற்று நிதனமாக விளையாடியது. பொறுப்புடன்  ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்து 86 ரன்கள் எடுத்தார்.இருப்பினும்  இலக்கை எட்ட முடியவில்லை.

  கடைசி வரை போராடிய இந்திய அணி 40 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி வரும் 9ம் தேதி ராஞ்சியில் நடைபெறவுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: India vs South Africa