#SAvsENG | பரபரப்பான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி - வீடியோ

#SAvsENG | பரபரப்பான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி - வீடியோ
SAvsENG
  • Share this:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்ப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக் மற்றும் பூம்புவா அதிரடியாக விளையாடினர். தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பூம்புவா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.


அதன்பிறகு இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் 38 பந்துகளில் 70 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இருப்பினும் அந்த அணியின் மற்ற வீரர்கள் சோபிக்காததால் இங்கிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.



குறிப்பாக கடைசி ஓவரே இந்தப்போட்டியில் திருப்பு முனையாக அமைந்தது. இந்த ஓவரில் வெறும் 7  ரன்களே தேவை என்ற நிலையில் பந்து வீசிய தென்னாப்பிரிக்காவின் லுங்கிடி நிகிடி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அந்த அணியை வெற்றி பெற வைத்தார்.

19-வது ஓவரில் இங்கிலாந்து அணி 16 ரன்களை சேர்த்திருந்த நிலையில் 20 ஓவரை வீசிய நிகிடி முதல் பந்தில் 2 ரன்களை விட்டுக்கொடுத்தார்.  5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், அடுத்த பந்தில் நிகிடி,  டாம் கரனின் விக்கெட்டை வீழ்த்த ஆட்டத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அடுத்த 3 பந்துகளில் மேலும் இரண்டு ரன்களை விட்டுக்கொடுத்த நிகிடி மற்றொரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. கடைசி பந்தை ஆதில் ரஷித் தட்டிவிட்டு  ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட்டானார். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.



இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த நிகிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் நிகிடி 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்