முகப்பு /செய்தி /விளையாட்டு / தென்ஆப்பிரிக்கா மண்ணில் சாதிக்குமா இந்திய அணி?

தென்ஆப்பிரிக்கா மண்ணில் சாதிக்குமா இந்திய அணி?

இந்தியா - தென்ஆப்ரிக்கா

இந்தியா - தென்ஆப்ரிக்கா

India vs South Africa: ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன.

  • Last Updated :

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 212 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா - தென்ஆப்ரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன்களுக்கும், தென்ஆப்பிரிக்கா 210 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

இதையடுத்து, 13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிசில் விளையாடிய இந்தியா, இரண்டாவது நாள் முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. இருப்பினும், தனியாளாக போராடிய ரிஷப் பந்த், சதம் அடித்து அசத்தினார். முடிவில், இந்தியா 198 ரன்களுக்குள் சுருண்டது.

பின்னர், 212 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய தென்ஆப்பிரிக்கா மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் சேர்த்தது. மேலும், அந்த அணியின் வெற்றிக்கு 111 ரன்கள் தேவைப்படுகிறது.

Also read... இந்தியா ஓபன் பாட்மிண்டன்: கொரோனா தொற்றால் முன்னணி வீரர்கள் விலகல்

top videos

    ஆனால், இந்திய பந்துவீச்சாளர்கள் மாயாஜாலம் செய்து, தென்ஆப்பிரிக்க மண்ணில் சாதனை படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை வகிக்கின்றன. எனவே, 3-வது போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையை முத்தமிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: India vs South Africa