• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • WI vs SA Test series | 30 ஆண்டுகளில் கிடைக்காத வாய்ப்பு: தடுமாறும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவோம்- மே.இ.தீவுகள் சூளுரை

WI vs SA Test series | 30 ஆண்டுகளில் கிடைக்காத வாய்ப்பு: தடுமாறும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவோம்- மே.இ.தீவுகள் சூளுரை

இன்று முதல் டெஸ்ட் ஆரம்பம்.

இன்று முதல் டெஸ்ட் ஆரம்பம்.

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி டீன் எல்கர் தலைமையில் இன்று செயிண்ட் லூசியாவில் டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

  • Share this:
    தென் ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன் டீன் எல்கர். மே.இ.தீவுகள் அணிக்கு கிரெய்க் பிராத்வெய்ட் கேப்டன்.

    முதல் டெஸ்ட் இன்று இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது.

    இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ள இரு அணிகளில் தென் ஆப்பிரிக்கா 18 போட்டிகளில் வென்றுள்ளது, மே.இ.தீவுகள் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.

    கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2-0 என்று தோல்வி கண்டது. ஆனால் இலங்கைக்கு எதிராக டிரா செய்த மே.இ.தீவுகள் வங்கதேச அணியை 2-0 என்று வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது, ஆகவே தன்னம்பிக்கை என்ற அளவில் மே.இ.தீவுகள் அணி வலுவாக உள்ளது, ,மேலும் தங்கள் சொந்த மண்ணில் அந்த அணியின் ஆதிக்கம் மேலோங்கவே செய்யும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அணி வாரியாகப் பார்த்தால் தென் ஆப்பிரிக்கா காகிதத்தில் வலுவாக உள்ளது. நார்ட்யே, ரபாடா, இங்கிடி, கேஷவ் மகராஜ், என்று பவுலிங் பரவாயில்லை, ஆனால் பேட்டிங்கில் டெஸ்ட் தரத்துக்கு கேப்டன் டீன் எல்கர் மட்டுமே சுவராக நிற்பார். குவிண்டன் டி காக் இருக்கிறார், தென் ஆப்பிரிக்க அணி இன்னும் செட்டில் ஆகவில்லை.

    அதனால்தான் 30 ஆண்டுகளில் அந்த அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக மே.இ.தீவுகள் அணி கருதுகிறது.

    மேலும் தென் ஆப்பிரிக்கா அணி கடந்த 15 இன்னிங்ஸ்களில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்டில் இருமுறை மட்டுமே 300 ரன்களை கடந்துள்ளது. ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது.

    மே.இ.தீவுகள் பந்து வீச்சில் அனுபவ ஜேசன் ஹோல்டர், கிமார் ரோச், அல்சாரி ஜோசப் உள்ளனர், ஷனன் கேப்ரியல் காயம் காரணமாக ஆட முடியாத நிலையில் உள்ளார், ஸ்பின்னில் கார்ன்வால் சிறந்த ஒரு வீரராகத் திகழ்கிறார். மே.இ.தீவுகள் அணியில் க்ருமா போனர், ரக்கீம் கார்ன்வால், ஜேசன் ஹோல்டர், ராஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் போன்ற ஆல்ரவுண்டர்கள் படை உள்ளது. இதில் ஜேசன் ஹோல்டர் அபாயகரமானவர். மாறாக தென் ஆப்பிரிக்க அணியில் வியான் முல்டர் மட்டுமே ஆல்ரவுண்டராக உள்ளார்.

    மே.இ.தீவுகள் அணி: கிரெய்க் பிராத்வெய்ட் (கேப்டன்), ஷேய் ஹோப், என்க்ருமா போனர், கைல் மேயர்ஸ், ராஸ்டன் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட் (துணைக் கேப்டன்), ஜேஸன் ஹோல்டர், ஜொஷுவா டா சில்வா (வி.கீ), ராக்கிம் கார்ன்வால், அல்சாரி ஜோசப், கிமார் ரோச்.

    தென் ஆப்பிரிக்க அணி: டீன் எல்கர், அய்டன் மார்க்ரம், ராசி வன் டெர் ட்யூசன், கீகன் பீட்டர்சன், தெம்பா பவூமா, குவிண்டன் டி காக், வியான் முல்டர், கேஷவ் மகராஜ், கேகிசோ ரபாடா, ஆன்ரிச் நார்ட்யே, லுங்கி இங்கிடி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: