• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup SA vs WI: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி- நான் ஆடவில்லை என்று விலகிய டீ காக்- பீல்டிங் தேர்வு

T20 Worldcup SA vs WI: தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி- நான் ஆடவில்லை என்று விலகிய டீ காக்- பீல்டிங் தேர்வு

குவிண்டன் டி காக் விலகல்.

குவிண்டன் டி காக் விலகல்.

  • Share this:
    தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் துபாயில் இன்னும் சற்று நேரத்தில் களமிறங்குகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். குவிண்டன் டீ காக் மிக முக்கியமான வீரர் இன்று தான் ஆடவில்லை என்று விலகுகிறேன் என்று கூறி தானாகவே விலகி விட்டார்.

    அவருக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ் அணிக்கு வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் இன்றும் எவின் லூயிஸும் சிம்மன்சும் தொடக்கத்தில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்தப் போட்டிக்கும் முன்பாக நிறவெறிக்கு எதிராக ஒரு முழங்காலை மடக்கி மனித குல ஒற்றுமையை வலியுறுத்தும் குறியீட்டு செயலை செய்ய வேண்டும், அனைத்து வீரர்களும் செய்ய வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் நிபந்தனையிட்டுள்ளது, ஆனால் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைவரும் இந்தச் செய்கையை செய்ய குவிண்டன் டி காக் மட்டும் ஒன்றுமே செய்யாமல் இருந்தார், அதாவது இதை குவிண்டன் டீ காக் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக அவரே காட்டியுள்ளார்.

    இதனால் அவர் மீது தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகத்துக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது, அவரை கூப்பிட்டு கேட்டிருக்கலாம் அல்லது கண்டித்திருக்கலாம், ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லை. ஆனால் இன்று அவர் அணியில் ஏன் இடம்பெறவில்லை என்று காரணம் கூறும்போது கேப்டன் தெம்பா பவுமா கூறியதாவது: குவிண்டன் டி காக் இல்லை, இன்று நான் ஆடவில்லை என்று சொந்தக் காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார், என்று தெம்பா பவுமா கூறியுள்ளார்.

    வெளியே தெரியவில்லை ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடைசியாக 3 அரைசதங்களை அடித்த டீ காக் இல்லை எனில் நிச்சயம் அந்த நிறவெறி எதிர்ப்புக்கு டீ காக்கின் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது. இது குறித்து நிச்சயம் உண்மை வெளிவரும். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு டீ காக் இன்மை பெரிய பின்னடைவே.

    வெஸ்ட் இண்டீஸ் அணி: எவின் லூயிஸ், கெயில், சிம்மன்ஸ், ஹெட்மையர், பூரன், பொலார்டு, ரஸல், டுவைன் பிராவோ, அகீல் ஹுசைன், ஹெய்டன் வால்ஷ், ரவி ராம்பால்.

    தென் ஆப்பிரிக்கா அணி: ரீசா ஹென்றிக்ஸ், தெம்பா பவுமா, அய்டன் மார்க்ரம், வான் டெர் டியூசன், டேவிட் மில்லர், கிளாசன், டுவைன் பிரிடோரியஸ், ரபாடா, மகராஜ், நார்ட்யே, தப்ரைஸ் ஷம்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: