Home /News /sports /

SA vs NZ test: தென் ஆப்பிரிக்கா 95 ஆல் அவுட்; 90 ஆண்டுகளில் இல்லாத மகா சரிவு

SA vs NZ test: தென் ஆப்பிரிக்கா 95 ஆல் அவுட்; 90 ஆண்டுகளில் இல்லாத மகா சரிவு

நியூசிலாந்து-தெ.ஆ. முதல் டெஸ்ட் 7 விக்கெட்டுகள் எடுத்த மேட் ஹென்றியுடன் நியூசிலாந்து  அணி.

நியூசிலாந்து-தெ.ஆ. முதல் டெஸ்ட் 7 விக்கெட்டுகள் எடுத்த மேட் ஹென்றியுடன் நியூசிலாந்து அணி.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் வியாழன் ஆன இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் கிரீன் டாப் பிட்சில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 23 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் வாழ்நாளின் சிறந்த பந்துவீச்சை நிகழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து ஐ 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் வியாழன் ஆன இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் கிரீன் டாப் பிட்சில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 23 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன் வாழ்நாளின் சிறந்த பந்துவீச்சை நிகழ்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

95 ஆல் அவுட் என்பது தென் ஆப்பிரிக்கா அணி கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் பேட் செய்து ஆல் அவுட் ஆகும் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையாகும். அதே போல் நியூசிலாந்தின் மேட் ஹென்றி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1915-க்குப் பிறகு சிறந்த பந்து வீச்சை நிகழ்த்திய பவுலர் ஆனார்.

கிரீன் டாப் பிட்சில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தார். இந்தப் போட்டியை தென் ஆப்பிரிக்கர்கள் லைவ் ஆகப் பார்க்க வேண்டுமென்றால் நள்ளிரவு நேரம் விழித்திருக்க வேண்டும், ஒருவேளை காலையில் எழுந்து பார்க்கும் போது அதிர்ந்து போயிருப்பார்கள், அல்லது தென் ஆப்பிரிக்கா இன்னும் பேட் செய்யவில்லை என்றே நினைத்திருப்பார்கள்.

இந்தியா போன்ற வலுவான அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு, இங்கு வந்து 95 ஆல் அவுட். ட்ரெண்ட் போல்ட் இல்லை என்பதால் மேட் ஹென்றிக்கு வாய்ப்பு கிடைத்தது, கிடைத்த வாய்ப்பை தென் ஆப்பிரிக்காவை சொருகுவதில் பயன்படுத்திக் கொண்டார். ப்ளே என்றவுடனேயே தென் ஆப்பிரிக்காவின் 3 விக்கெட்டுகளை காலி செய்தார் ஹென்றி. உணவு இடைவேளைக்குப் பிறகு வந்தார் ஹென்றி, தென் ஆப்பிரிக்காவை மேலும் 4 விக்கெட்டுகள் எடுத்து வீட்டுக்கு அனுப்பியதில் தென் ஆப்பிரிக்கா கடும் அதிர்ச்சியடைந்தது.

முதலில் டீன் எல்கர், ஹென்றியின் வெளியே சென்றபந்தை விரட்டி தேர்ட் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி 1 ரன்னுக்கு வெளியேறினார். டிம் சவுதீ டைவ் அடித்து கேட்சை எடுத்தார். இந்தியாவுக்கு எதிராக பயங்கரமாக ஆடிய வளரும் நட்சத்திரம் கீகன் பீட்டர்சன் கோவிட் காய்ச்சலினால் வரமுடியாமல் போனதையடுத்து அறிமுக புதுமுக வீரர் சரள் எர்வீ 10 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் ரைசிங் பந்துக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார். எய்டன் மார்க்ரம் (15), ஹென்றியின் பந்தை பேக்ஃபுட் ட்ரைவ் ஆட முயன்றார் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

ரசி வான் டெர் டுசன் இறங்கினா, அதே ஓவரில் ஹென்றியின் பந்து ஒன்று கண்டபடி ஸ்விங் ஆகி எழும்ப அவர் நிலையையே திருப்பி விட்டார், இதனால் பந்து தானாகவே எட்ஜ் எடுத்து கேட்ச் ஆனது. இந்த முறையும் சவுதீ அருமையான கேட்ச், தென் ஆப்பிரிக்கா 37/4. தென் ஆப்பிரிக்காவில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் ஜுபைர் ஹம்சா என்பவரே இவர் 25 ரன்கள் எடுத்து ஹென்றியிடம் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்து அதிக ஸ்கோர் எடுத்த விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 18 ரன்களில் எல்.பி.ஆனார், ரிவியூவில் ஹென்றிக்கு விக்கெட். இடது கை உயர பவுலர் மார்க்கோ யான்சென் ஒருமுனையில் 2 நாட் அவுட் என்று நிற்க மறுமுனையில் ரபாடா, ஸ்டர்மன் ஆகியோர் டக் அவுட் ஆகி ஹென்றியிடம் வெளியேறினர், டுவேன் ஆலிவர், வாக்னரிடம் வீழ்ந்தார், தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 95 ரன்களுக்கு சுருண்டது.

நியூசிலாந்து இன்னிங்ஸை தொடங்கி 34 ஓவர்களில் 95 ரன்களைச் சுலபமாகக் கடந்தது, தென் ஆப்பிரிக்கா பீல்டிங்கில் 4 கேட்ச்களை விட்டது. வில் யங்கை யான்சென் வீழ்த்தினார், அபாயகரமான டெஸ்ட் பேட்டர் டெவன் கான்வே 36 பந்துகளில் துரதிர்ஷ்டவசமாக இன்சைடு எட்ஜில் ஆலிவர் பந்தில் பவுல்டு ஆனார். ஆலிவியர் 2 விக்கெட்டுகள். ஆட்ட முடிவில் ஹென்றி நிகோலஸ் 37 ரன்களுடனும் நீல் வாக்னர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Published by:Muthukumar
First published:

Tags: New Zealand, South Africa, Test cricket

அடுத்த செய்தி