Home /News /sports /

ரகானே, புஜாராவை நீக்கினால் கோலியையும் நீக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா சாட்டையடி

ரகானே, புஜாராவை நீக்கினால் கோலியையும் நீக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா சாட்டையடி

விராட் கோலி

விராட் கோலி

ரகானே, புஜாரா நீண்ட காலமாக பார்முக்குப் போராடி வருகின்றனர், அவர்கள் இருவருக்குமே கால்கள் நகர்வதில்லை டெக்னிக்கில் படு வீக், இந்நிலையில் இவர்கள் இருவரையும் நீக்கினால் இதே போன்று சொதப்பும் கோலியையும்தான் தூக்க வேண்டும் என்று முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சாட்டையடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    ரகானே, புஜாரா நீண்ட காலமாக பார்முக்குப் போராடி வருகின்றனர், அவர்கள் இருவருக்குமே கால்கள் நகர்வதில்லை டெக்னிக்கில் படு வீக், இந்நிலையில் இவர்கள் இருவரையும் நீக்கினால் இதே போன்று சொதப்பும் கோலியையும்தான் தூக்க வேண்டும் என்று முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சாட்டையடி கொடுத்துள்ளார்.

    நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா தொடரில் முதல் டெஸ்ட்டில் ரகானே கொஞ்சம் பரவாயில்லை என்ற போது, புஜாரா நிச்சயமாக அணிக்கு ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ்தான். 2வது டெஸ்ட்டில் நேற்று புஜாரா 3 ரன்களிலும் அடுத்த பந்தே ஆலிவரிடம் ரகானே டக் அவுட்டும் ஆயினர்.

    2019-க்குப் பிறகே இருவரும் சராசரி 30 என்ற அளவில்தான் ரன் எடுத்து வருகின்றனர். அஸ்வின் டக்கென பிட்சைப் புரிந்து கொண்டு ஆக்ரோஷமாக ஆடி 46 ரன்களை எடுத்தார். அதனல் 202 ரன்கள் வந்தது இல்லையெனில் 150 தான். அஸ்வின் ஆடுகிறார் புஜாரா ஆடுவதில்லை என்றால் அஸ்வினை 3ம் நிலையில் இறக்கி புஜாராவை தூக்க வேண்டியதுதான், ரகானேவை தூக்கி விட்டு ஷ்ரேயஸ் அய்யரைக் கொண்டு வர வேண்டியதுதான்.

    இந்நிலையில் ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது, “ரகானே, புஜாராவின் இடத்தை கேள்வி கேட்பவர்கள் அதே எண்ணிக்கையைத்தான் கொண்டிருக்கும் கோலியின் இடத்தை கேள்வி கேட்பதில்லை, இது ஏன்? ஏனெனில் கோலி ஒரு கேப்டன், இந்த இருவருக்கும் மேலாகவும் அவர் சில விஷயங்களைச் செய்திருக்கிறார் என்றுதான்.

    கம்பேர் செய்யக் கூடாது, ஆனால் ரகானேவும் புஜாராவும் நிறைய அணிக்காக பங்களித்துள்ளனர். மேலும் தொடரின் நடுவே இரண்டு அனுபவ வீரர்களை தூக்குவது நிச்சயம் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

    புஜாராவும் ரகானேவும் பெரிய பிரச்சனையாக இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தொடரின் பாதியில் மாற்றுவது பின்னடைவை ஏற்படுத்தும்” என்ரார் ஆஷிஷ் நெஹ்ரா.

    இதையும் படிங்க: என் கனவில் பகவான் கிருஷ்ணர் தோன்றி நாங்கள்தான் உ.பி.யில் ஆட்சி அமைப்போம் என்றார்- அகிலேஷ் யாதவ்

    ஜொகான்னஸ் பர்க் டெஸ்ட் 2ம் நாள் ஆட்டம் இன்று 35/1 என்ற தென் ஆப்பிரிக்கா ஸ்கோருடன் தொடங்குகிறது, சிராஜ் பவுலிங் போடுவாரா என்பது சந்தேகமாகியுள்ளது. இந்தியா 202 ரன்கள்தான் எடுத்துள்ளது, தென் ஆப்பிரிக்காவை குறைந்தது 175-180 ரன்களில் மடிக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, Cheteshwar Pujara, India vs South Africa

    அடுத்த செய்தி