Home /News /sports /

IND vs SA, 2nd day| 2-வது பந்தே பும்ரா ஸ்டம்பை பெயர்த்தார்- பீட்டர்சன், டியூசன் ரீ-பில்ட்- தென் ஆப்பிரிக்கா 100/3

IND vs SA, 2nd day| 2-வது பந்தே பும்ரா ஸ்டம்பை பெயர்த்தார்- பீட்டர்சன், டியூசன் ரீ-பில்ட்- தென் ஆப்பிரிக்கா 100/3

டூசன் - பீட்டர்சன்

டூசன் - பீட்டர்சன்

உமேஷ் யாதவ்வை ஒப்பிடும் போது ஷர்துல் தாக்கூர் அருமையாக வீசினார். முதல் 7 பந்துகளில் அருமையான 3 வாய்ப்புகளை ஏற்படுத்தினார்.

    கேப்டவுன் டெஸ்ட் 2ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் பொது தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. ரசி வான் டெர் டியூசன் 17 ரன்களுடனும் கீகன் பீட்டர்சன் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இன்று 17/1 என்று தென் ஆப்பிரிக்கா தொடங்கிய போது பும்ரா இங்கு தொடங்கினார். 2வது பந்தே மார்க்ரம் பும்ரா வீசிய இன்ஸ்விங்கரை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஸ்டம்புக்கு மேலே செல்லும் என்று நினைத்து ஆடாமல் விட்டார், பந்து ஆஃப் ஸ்டம்ப்பைப் பதம் பார்க்க தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சித் தொடக்கம் கண்டது, இந்தியாவுக்கு நல்ல தொடக்கம்.

    மார்க்ரம் பவுல்டு


    இன்னொரு முனையில் ஷமி அற்புதமாக வீசினார், உமேஷ் யாதவ் சீரான முறையில் வீசாவிட்டாலும் நன்றாக ஆடிய கேஷவ் மகராஜ் (25) விக்கெட்டை கிளீன் பவுல்டில் வீழ்த்தினார். பந்து உள்ளே வந்தது மிடில் ஸ்டம்பை படுக்கப் போட்டது. கேசவ் மகராஜ் பும்ராவை நன்றாக ஆடினார். ஷமியையும் கரெக்ட் டெக்னிக்கில் ஆடிவந்த போத் ஊமேஷ் யாதவின் இன்ஸ்விங்கர் அவரைப் பதம் பார்த்தது.

    ஷமி டேஞ்சர் ஏரியாவில் கால் வைத்து போடுவதாக நடுவர் எராஸ்மஸ் எச்சரிக்கை விடுத்தா, இது நடுவரின் பணி, அவர் அவர் வேலையைச் செய்கிறார், உடனே வந்து விட்டார் நம் நாட்டாமை, பஞ்சாயத்து கோலி நடுவரிடம் வாக்குவாதம் புரிய. ஆனால் நடுவர் கோலிக்குப் புரிய வைத்தார். எப்படி வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்ற ஆஸ்திரேலியா பட்ட கஷ்டம் கோலிக்குத் தெரிய வேண்டும். இப்போதுதான் கொஞ்சம் மைதானத்தில் கோணங்கி வேலைகளை விட்டு கிரிக்கெட்டராக நடந்து கொண்டு வருகிறார், அதற்குள் நடுவரிடம் வாக்குவாதம். அவரவர் பணியைச் செய்ய விடுவதுதான் கேப்டனுக்கு அழகு.

    கீகன் பீட்டர்சன் ஒருமுறை ஷமியின் பந்து ஒன்று மேலே எழும்ப மட்டையின் மேல்விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் ராகுலுக்கு முன்னால் விழுந்தது. மற்றபடி கீகன் பீட்டர்சன் ஒரு ரைசிங் ஸ்டார், என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை, அபாரமான ஒரு பேக்ஃபுட் பிளேயர். பஞ்ச் நன்றாக ஆடுகிறார், பும்ராவை குறிப்பாக நன்றாக ஆடுகிறார். பும்ராவினால் அவரை ஒர்க் அவுட் செய்ய முடியவில்லை.

    அதே போல் உமேஷ் யாதவ்வை ஒப்பிடும் போது ஷர்துல் தாக்கூர் அருமையாக வீசினார். முதல் 7 பந்துகளில் அருமையான 3 வாய்ப்புகளை ஏற்படுத்தினார். கீகன் பீட்டர்சனுக்கு எல்.பி.முறையீடு ஒன்று கோலியின் தவறான ரிவியூவினால் இல்லை என்று தீர்ப்பானது. ஆனால் அது நல்ல பந்து, மேலே செல்லும் பந்து. ராசி வான் டெர் டியூசன் எட்ஜை ஒருமுறை சரியாக பிடித்தார் ஷர்துல் பந்து கோலிக்கு மிகவும் முன்னால் பிட்ச் ஆனது, ஆனால் எட்ஜ் என்பது துல்லியமானது. கீகன் பீட்டர்சனுக்கும் ஒரு பந்து பீல்டர் முன்னால் விழுந்தது.

    பும்ரா 11 ஓவர் 4 மெய்டன் 16 ரன் 2 விக்கெட். உமேஷ் யாதவ் 7 ஓவர் 29 ரன் ஒரு விக்கெட். உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்கா 100/3. கீகன் பீட்டர்சன், டியூசன் இருவரும் சேர்ந்து இதுவரை 4வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 55 ரன்களைச் சேர்த்தனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, Jasprit bumrah, Umesh yadav

    அடுத்த செய்தி