Home /News /sports /

தென் ஆப்பிரிக்காவுக்கு 3-0 ஒயிட் வாஷ் அளிக்குமா இந்தியா?- நாளை முதல் ஒருநாள் போட்டி, ஹெட் டு ஹெட் ரெக்கார்ட்

தென் ஆப்பிரிக்காவுக்கு 3-0 ஒயிட் வாஷ் அளிக்குமா இந்தியா?- நாளை முதல் ஒருநாள் போட்டி, ஹெட் டு ஹெட் ரெக்கார்ட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா புதன் கிழமை முதல் ஒருநாள்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா புதன் கிழமை முதல் ஒருநாள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாளை (புதன், 19-1-22) முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி புதிய கேப்டன் கே.எல். ராகுல் தலைமையில் இறங்குகிறது. பார்ல் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கடைசியாக ஜூலை 2021 இல் இலங்கைக்கு எதிராக ஷிகர் தவானின் தலைமையின் கீழ் ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் விளையாடினர். தெனாப்பிரிக்காவின் கேப்டன் தெம்பா பவுமா ஒருநாள் (ODI) தொடரில் இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் டெஸ்ட்டில் கொடுத்த அடியை தர விரும்புவார். தென் ஆப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்சி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் ஜான்மேன் மலான் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்.

மாறாக இந்திய அணியில் புதிய ஐபிஎல் நட்சத்திரங்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் அணிக்குள் வர மூத்த வீரர் ஷிகர் தவானுடன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளின் புள்ளி விவரங்களைப் பார்ப்போம்:

நேருக்கு நேர்: தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் 84 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன இதில் தென் ஆப்பிரிக்கா 46 முறை வென்றுள்ளது, 35 முறை தோல்வியடைந்தது. மூன்று போட்டிகளில் எந்த முடிவும் இல்லை. தென் ஆப்பிரிக்காவில் இரு அணிகளும் 34 ODIகளில் பங்கேற்றுள்ளன, இதில் தென் ஆப்பிரிக்கா 22 முறை வெற்றியை ருசித்துள்ளனர், பத்து முறை தோல்வியடைந்தனர் மற்றும் இரண்டு போட்டிகளில் எந்த முடிவும்இல்லை.

இந்தியா 1992/93 முதல் தென்னாப்பிரிக்காவில் ஐந்து இருதரப்பு தொடர்களை தென்னாப்பிரிக்காவுடன் விளையாடியுள்ளது, அங்கு அவர்கள் ஒரு தொடரை வென்றது மற்றும் நான்கில் தோல்வியடைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கடைசியாக நடந்த ஒருநாள் தொடரில் 5-1 (6) என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை அவர்கள் மண்ணில் முதல் முறையாக கோலி தலைமையில் வென்றோம்.

பிற புள்ளி விவரங்கள்:

3 - யஜுவேந்திர செஹல் 100 ஒருநாள் விக்கெட்டுகளை எடுக்க மூன்று விக்கெட்டுகள் தேவை.

2 – ரிஷப் பந்த் ஒருநாள் போட்டிகளில் 50 பவுண்டரிகளை பூர்த்தி செய்ய இரண்டு பவுண்டரிகள் தேவை.

1 - தெம்பா பவுமா ஒருநாள் போட்டிகளில் 500 ரன்களை எட்டுவதற்கு ஒரு ரன் தேவை.

1 – கேஎல் ராகுல் இந்திய ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருப்பது இதுவே முதல் முறை.

2 - குல்தீப் யாதவை (17) விஞ்ச செஹலுக்கு (16) இரண்டு விக்கெட்டுகள் தேவை மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக எதிராக இந்தியாவின் அதிக ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

5 – சர்வதேச கிரிக்கெட்டில் 8500 ரன்களை எட்டுவதற்கு டேவிட் மில்லருக்குத் தேவை இன்னும் 5 ரன்கள்.

18 - குயின்டன் டி காக் 10,500 ரன்களை அனைத்து வடிவங்களிலும் எட்டுவதற்கு இன்னும் 18 ரன்கள் மட்டுமே உள்ளது.

9 - சச்சின் டெண்டுல்கரை (5065) விஞ்சி, வெளிநாட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய வீரராக சாதிக்க விராட் கோலிக்கு (5057) 9 ரன்கள் தேவை.

1 - ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவங்களிலும் 150 போட்டிகளில் விளையாடிய வீரராக இன்னும் ஒரு போட்டி உள்ளது.

3 - ஒருநாள் போட்டிகளில் 250 பவுண்டரிகளை எட்டுவதற்கு மில்லருக்கு மூன்று பவுண்டரிகள் தேவை.

27 – ராகுல் திராவிட் (1309), சவுரவ் கங்குலி (1313) ஆகியோரைக் கடந்து, இந்தியாவுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை அடைய கோலிக்கு (1287) 27 ரன்கள் தேவை.

12 – ஷிகர் தவான் (2488) வெளிநாடுகளில் ஒருநாள் போட்டிகளில் 2500 ரன்களை முடிக்க 12 ரன்கள் தேவை.

16 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் 800 ரன்களை எட்டுவதற்கு குயின்டன் டி காக் இன்னும் 16 ரன்கள் எடுக்க வேண்டும்.

2 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டிகளில் 800 ரன்களை எட்டுவதற்கு தவானுக்கு (798) இரண்டு ரன்கள் தேவை.
Published by:Muthukumar
First published:

Tags: Cricket, India vs South Africa, ODI

அடுத்த செய்தி