Home /News /sports /

இங்கிலாந்தை தட்டித் தூக்கிய ரபாடா 5விக்.: 165 ஆல் அவுட்

இங்கிலாந்தை தட்டித் தூக்கிய ரபாடா 5விக்.: 165 ஆல் அவுட்

லார்ட்சில் ரபாடா 5 விக்கெட்

லார்ட்சில் ரபாடா 5 விக்கெட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்குச் சுருட்டியது.கேகிசோ ரபாடா 19 ஓவர் 3 மெய்டன் 52 ரன்கள் 5 விக்கெட்டுகள். அபார பவுலிங்கில் ‘பாஸ்பால்’ இங்கிலாந்தை கதறடித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்குச் சுருட்டியது.கேகிசோ ரபாடா 19 ஓவர் 3 மெய்டன் 52 ரன்கள் 5 விக்கெட்டுகள். அபார பவுலிங்கில் ‘பாஸ்பால்’ இங்கிலாந்தை கதறடித்தார்.

    நேற்று முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு 32 ஓவர்களே நடந்தது இங்கிலாந்து அதில் 116/6 என்று முடித்து இன்று தொடங்கினர். வந்தவுடனேயே முதல் ஓவரில் சாரல் எர்வி ஆலி போப்புக்கு கேட்சை விட்டார், ஆனாலும் அவர் நீண்ட நேரம் அதன் பிறகு தாக்குப் பிடிக்கவில்லை, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற ரபாடா பந்தை காலை பிட்ச் ஆஃப் த பாலுக்குக் கொண்டு செல்லாமல் ட்ரைவ் ஆடப்போய் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். அவர் 102 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 134/7.

    அடுத்ததாக ஸ்டூவர்ட் பிராட் கடுமையான ஷார்ட் பிட்ச் பந்து சோதனைகளை எதிர்கொண்டார், சில பந்துகளை அசிங்கமாக ஆடினார். மட்டையை சில வேளைகளில் ரேண்டமாக பந்தின் மீது விட்டார், இதில் 2 பவுண்டரிகள் சிக்க 15 ரன்கள் எடுத்து கடைசியில் வைடு பந்தை பாயிண்டில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரபாடா விக்கெட். 8/145. ஜாக் லீச் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் 15 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். ஆனால் இவர் யான்சென் பந்தில் பவுல்டு ஆனார். 9/164. கடைசியாக ஆண்டர்சன் ரபாடா பந்தில் எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார். 165/10. மேத்யூ பாட்ஸ் 6 நாட் அவுட்.

    மொத்தம் 45 ஓவர்கள்தான் பாஸ்பால் இங்கிலாந்து தாக்குப் பிடித்தது. நிச்சயம் இரண்டாவது இன்னிங்ஸில் படையல் நடத்தலாம் என்று திட்டமிட்டிருப்பார்கள், ஆனால் தென் ஆப்பிரிக்கா குறைந்தது 350 ரன்களாவது எடுக்க வேண்டும்.

    ஆன்ரிச் நார்ட்யே 3 விக்கெட்டுகளை நேற்று கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா தற்போது தன் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது, டீன் எல்கர் 7 நாட் அவுட், சாரல் எர்வி 7 நாட் அவுட், தென் ஆப்பிரிக்கா 15/0.
    Published by:Muthukumar
    First published:

    Tags: England, First test cricket match, South Africa

    அடுத்த செய்தி