டர்பனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் 274 ரன்கள் வெற்றி இலக்குடன் 2வது இன்னிங்ஸை இன்று 11/3 என்ற நிலையில் தொடங்கிய வங்கதேசம் 42 ரன்களில் மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் இழந்து 53 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 220 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இடது கை ஸ்பின்னர் கேசவ் மகராஜ், 32 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மொத்தமே 19 ஓவர்கள் இதை வேறு யாரும் வீசாமல் மகராஜ் மற்றும் சைமன் ஹார்மர் மட்டுமே வீசினார்கள். ஹார்மர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் மோதின.
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 121 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
அணியில் அதிகபட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணி 298 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மஹ்முதுல் ஹசன் ஜாய் சிறப்பாக விளையாடி சதமடித்து 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும் லிசாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது .இதனால் 10 விக்கெட்டுக்களை இழந்து 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா.
இதனால் 69 ரன்கள் முன்னிலையுடன் 273 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா, இதில் நேற்றே 3 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3விக்கெட்டுக்களை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது . இன்று மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், யாசிர் அலி, மெஹதி ஹசன் மிராஸ், ஷாண்டோ, கலீத் அகமெட், டஸ்கின் அகமெட் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அரைமணி நேரத்துக்குள் கடையை மூடினர்.
வங்கதேச அணியில் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ அதிகபட்சமாக 26 ரன்கள் என்றும் டஸ்கின் அகமெட் 14 ரன்கள் என்று இருவரும் இரட்டை இலக்கம் எட்டினர், மீதி வீரர்களின் ஸ்கோர் டெலிபோன் நம்பர் போல் 402025000 என்று காட்சியளிக்கிறது. ஆட்ட நாயகன் கேசவ் மகராஜ்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.