ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வரலாற்றை மாற்றி அமைக்குமா இந்திய அணி..! - தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை

வரலாற்றை மாற்றி அமைக்குமா இந்திய அணி..! - தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை

மாதிரி படம்

மாதிரி படம்

உலகக்கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்த நிலையில் அஸ்வினுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Thiruvananthapuram [Trivandrum], India

  இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20  கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையேன முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது.

  அது மட்டும் இல்லாமால் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் காயம் காரணமாக விலகியுள்ள தீபக் ஹூடா மற்றும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் முகமது சமியும் இத்தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

  Also Read:  PFI இயக்கத்தை தடை செய்து மத்திய அரசு உத்தரவு

  இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர், ஷபாஸ் அகமது உள்ளிட்டோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பந்துவீச்சில் தொடர்ந்து மோசமாகவே உள்ளது. குறிப்பாக டெத் ஓவர்களை தொடர்ந்து இந்திய அணி ரன்களை வாரி வழங்கி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பும்ரா 50 ரன்களையும், புவனேஷ்குமார் 3 ஓவர்களில் 39 ரன்களையும் வாரி வழங்கினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதே நிலையில் இந்திய அணியின் டெத் ஓவர் இருந்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கனவு கேள்வி குறியாகிவிடும். மேலும் உலகக்கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்த நிலையில் அஸ்வினுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வென்றதில்லை என்பதால் இந்த முறை அதனை உடைத்து வரலாற்றை மாற்றி அமைக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

  பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் வலுவான நிலையில் உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India vs South Africa, T20, T20 World Cup, Thiruvananthapuram