முகப்பு /செய்தி /விளையாட்டு / ENG vs SA 2nd test: பென் ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ் சதம் - தென் ஆப்பிரிக்காவை நொறுக்கிய இங்கிலாந்து

ENG vs SA 2nd test: பென் ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ் சதம் - தென் ஆப்பிரிக்காவை நொறுக்கிய இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்து

முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இங்கிலாந்து இந்த டெஸ்ட்டில் அதே போல் பதிலடி கொடுக்கும் முகமாக 2ம் நாளான நேற்று பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் சதங்களுடன் 415/9 என்று டிக்ளேர் செய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaManchesterManchester

முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இங்கிலாந்து இந்த டெஸ்ட்டில் அதே போல் பதிலடி கொடுக்கும் முகமாக 2ம் நாளான நேற்று பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் சதங்களுடன் 415/9 என்று டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 241 ரன்கள் பின் தங்கிய தென் ஆப்பிரிக்கா தன் 2வது இன்னிங்சில் நேற்று விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது.

சாரல் எர்வீ 12 ரன்களுடனும் கேப்டன் டீன் எல்கர் 11 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. பேர்ஸ்டோ (49 ரன்), ஜாக் கிராவ்லி (38 ரன்) ஆகியோர் அன்ரிச் நோர்டியாவின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் பென் போக்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வலுவான நிலைக்கு உயர்த்தினர். தனது 12-வது சதத்தை எட்டிய பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களில் (163 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். பென் போக்ஸ் தனது 2-வது சதத்தை அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 106.4 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.

போக்ஸ் 113 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்து 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை ஆடியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்துள்ளது. இன்று, 3-வது நாள்ஆட்டம் நடைபெறும்.

Also Read:  ஆசியக் கோப்பை இன்று தொடக்கம்: இலங்கை -ஆப்கானிஸ்தான் 11 வீரர்கள் - முழு விவரம்

ஸ்டோக்ஸ் சரி, பென் ஃபோக்சை எடுக்க முடியவில்லை என்பது தென் ஆப்பிரிக்கா இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பவுலிங்கை நம்பி சோடை போனதைக் காட்டுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ரபாடாவை போட்டு சாத்தி விட்டனர், 23 ஓவர்களில் 110 ரன்களை அவர் கொடுத்தார். ஆன்ரிச் நார்ட்யேவும் 20 ஓவர்களில் 82 ரன்கள் என்று ஓவருக்கு 4க்கும் அதிகமாக ரன்களை கொடுத்துள்ளார். ஸ்பின்னர்களான கேஷவ் மகராஜ், சைமன் ஹார்மர் தங்களிடையே 45 ஓவர்களை வீசி 151 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.  முதலில் டாஸ் வென்று பேட் செய்தது டீன் எல்கரின் மகா தவறு, 2வது ஸ்பின் பிட்ச் என்று கருதி யான்சென் போன்ற ஆல்ரவுண்டரை உட்கார வைத்தது அடுத்த தவறு, இன்று தோல்வி, அதுவும் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்டுள்ளது தென் ஆப்பிரிக்கா.

First published:

Tags: Ben stokes, England, South Africa