Home /News /sports /

INDvSA | தென் ஆப்பிரிக்கா தொடர்: ராகுல் திராவிட்டுகுத்தான் பெரிய ‘ஆசிட் டெஸ்ட்’, சொல்கிறார் முன்னாள் வீரர்

INDvSA | தென் ஆப்பிரிக்கா தொடர்: ராகுல் திராவிட்டுகுத்தான் பெரிய ‘ஆசிட் டெஸ்ட்’, சொல்கிறார் முன்னாள் வீரர்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

ரவி சாஸ்திரி பயிற்சியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் கலக்கியிருக்கும் இந்திய அணி அதிவேக பவுன்ஸ் பிட்ச்கள் கொண்ட தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்குத்தான் பெரிய ஆசிட் டெஸ்ட் என்கிறார் முன்னாள் ஆல்ரவுண்டர் ரிதீந்தர் சிங் சோதி.

மேலும் படிக்கவும் ...
    ரவி சாஸ்திரி பயிற்சியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் கலக்கியிருக்கும் இந்திய அணி அதிவேக பவுன்ஸ் பிட்ச்கள் கொண்ட தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் 26 முதல் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பது பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்குத்தான் பெரிய ஆசிட் டெஸ்ட் என்கிறார் முன்னாள் ஆல்ரவுண்டர் ரிதீந்தர் சிங் சோதி.

    3 டெஸ்ட் மட்டுமல்ல, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வலுவான அணியில்லை என்றாலும், சொந்த நாட்டில் அவர்கள் பந்து வீச்சு பயங்கரமானது, ரபாடா, நார்ட்யே, லுங்கி இங்கிடி, ஆலிவியர் என்று பெரும்படை இந்தியாவை தாக்க தயாராக இருக்கிறது. குறைந்த ஸ்கோர் தொடராக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகையில் பேப்பரில் இந்திய அணி வலுவாக உள்ளது.

    Also Read : Year Ender 2021:நியூஸ் 18 கிரிக்கெட் நெக்ஸ்ட்டின் 2021-ம் ஆண்டின் சிறந்த டி20 அணி - ரிஸ்வான் முன்னிலை

    ஆனால் இந்திய பேட்டிங்கில் ரோகித் இல்லை, ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி டாப் ஆர்டர் இந்த பவுலிங்குக்கு எதிராக தேறுமா என்பது தெரியவில்லை. மேலும் ரவிசாஸ்திரி தான் ஒரு பெரிய வீரர் இல்லாவிட்டாலும் தான் ஒரு பெரிய கோச் என்பதை நிரூபித்து சென்றுள்ள நிலையில் இந்தத் தொடரில் தோற்றால் அது ராகுல் திராவிட்டுக்கு நிச்சயம் கெட்ட பெயரைத்தான் உருவாக்கும். எனவே ராகுல் திராவிடுக்கு இது ஒரு ஆசிட் டெஸ்ட் என்கிறார் முன்னாள் ஆல்ரவுண்டர் ரிதீந்தர் சிங் சோதி.

    “ராகுல் திராவிட்டுக்கு பெரிய சேலஞ்ச் காத்திருக்கிறது. காரணம் சமீபத்திய கேப்டன்சி சர்ச்சைகள் ஒருபுறம். இதனையடுத்து அணியை தூக்கி நிறுத்தும் பணி இருக்கிறது திராவிடுக்கு. எனவே இது ராகுல் திராவிட்டுக்கு இது ஆசிட் டெஸ்ட். ரோகித் சர்மா, விராட் கோலி இடையே ஏதேனும் உண்மையில் பிரச்சனை இருந்தால் ராகுல் திராவிட் முதலில் அதைத் தீர்த்தாக வேண்டும்.

    Also Read: ரிஸ்வான், பாபர் ஆசம் போல் வீரர்கள் தங்களிடம் இல்லை என இந்தியா கூறும்- ரஷீத் லடீப்

    தென் ஆப்பிரிக்கா பவுலிங் வரிசை அபாரமானது. ராகுல் திராவிட் இந்த இடத்தில்தான் அதிகம் பணியாற்ற வேண்டியிருக்கும். உள்நாட்டுத் தொடரில் நன்றாக ஆடினோம், இங்கிலாந்தில் நன்றாக ஆடினோம், ஆனால் இங்கு ஆசிட் டெஸ்ட் காத்திருக்கிறது. இந்தத் தொடரை மட்டும் சரியாக ஆடிவிட்டால் ராகுல் திராவிட் ஒரு வீரராக பெற்ற பெயரைப்போல் பயிற்சியாளராகவும் சிறப்புப் பெயர் எடுப்பார்” என்றார் ரிதீந்தர் சிங் சோதி.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, India vs South Africa 2019, Rahul Dravid

    அடுத்த செய்தி