Home /News /sports /

இந்திய உலகக்கோப்பை டி20 அணியைச் சோதித்துப் பார்க்க வருகிறது தென் ஆப்பிரிக்க அணி

இந்திய உலகக்கோப்பை டி20 அணியைச் சோதித்துப் பார்க்க வருகிறது தென் ஆப்பிரிக்க அணி

இந்தியாவுக்கு வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி.

இந்தியாவுக்கு வருகிறது தென் ஆப்பிரிக்கா அணி.

நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

    நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜூன் 9-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன்.12), விசாகப்பட்டிணம் (ஜூன்.14), ராஜ்கோட் (ஜூன்.17), பெங்களூரு (ஜூன்.19) ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    அக்டோபர்-நவம்பர் மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள நிலையில், அதையொட்டி இளம் வீரர்களை பரிசோதித்து பார்க்க இந்த தொடர் இந்தியாவுக்கு அருமையான வாய்ப்பாகும். அதே வேளையில் தோல்வி கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பை டி20 கேப்டன்சிக்குத் தாங்குவாரா என்பதையும் சோதித்துப் பார்த்து விடலாம்.

    ஏனெனில் மும்பை இந்தியன்ஸுக்காக அவர் கேப்டன்சி செய்யும் விதம் கடும் எரிச்சலைக் கிளப்புவதாக அமைந்துள்ளது, உனாட்கட்டை என்ன பிரித்து மேய்ந்தாலும் அவருக்கு 4 ஓவரை முடிக்கிறார்.

    ஷோகீன், பொலார்ட் அருமையாக வீசினாலும் 4 ஓவர்களை முடிக்கத் தவறுகிறார், பும்ராவை 20வது ஓவரை வீச வைக்காமல் 20வது ஓவரில்தான் மாட்டிக் கொள்கிறார் ரோஹித் சர்மா.

    இந்தக் காலத்தில் தோனியை ஆடவிடும் ஒரே கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா. எனவே அவரது கேப்டன்சி திறமைகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த இந்தத் தென் ஆப்பிரிக்கா தொடர் ஒரு சிறந்த களனாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதே போல் இந்த ஐபிஎல் தொடர் இஷான் கிஷன் போன்ற ஹைப் வீரர்களை அம்பலப்படுத்தி விட்டது. அதே போல் கோலியின் காலமும் முடிந்து விட்டது என்பதை அறிவுறுத்துகிறது.

    ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய அணியை உருவாக்கி அனுப்ப வேண்டும், ரோஹித் சர்மா, விராட் கோலி, அணியில் இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான். போதும் 3 வடிவங்களிலும் இவர்கள் ஆடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது ஒன்றும் எழுதப்படாத விதியல்ல, ஸ்பான்சர்கள் செய்யும் விதியே.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, IPL 2022

    அடுத்த செய்தி