SA20 லீக் போட்டியின் மிகவும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் தகுதிச் சுற்று இன்று இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரண்டு பலம்வாய்ந்த அணிகள் இந்த அரையிறுதி ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழையும் அந்த அணி யார் என்பதை பார்க்க இன்று இரவு 9 மணிக்கு வயகாம் 18-ன் தமிழ் தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் காணத்தவறாதீர்கள்.
தற்போது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பான பேட்டிங் மற்றும் பீல்டிங்கிற்கு பிரபலமான ஃபாஃப் டு பிளெசி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருப்பது தென்னாப்பிரிக்க டி20லீக் இறுதிப் போட்டிக்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என மக்களால் எதிர் பார்க்கப்படுகிறது.
2014 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியை வெற்றிபெற வழிநடத்திய ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடுமையான சவாலான போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் இடையேயான அரையிறுதி ஆட்டம் இன்று இரவு 9 மணிக்கு (IST) செஞ்சரியனில் நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் நிகழ்ந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிகள் பிப்ரவரி 11ம் தேதி 2023, சனிக்கிழமை வாண்டரர்ஸில் நடக்கும் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.
SA20 அரையிறுதி போட்டி அம்பயர்கள்: போட்டி நடுவர் - பேரிலாம்ப்சன், கள நடுவர் - மரைஸ் எராமஸ் மற்றும் போங்காய் ஜெலே, டிவி நடுவர் - அல்லாஷூதீன் பலேக்கர், நான்காவது நடுவர் - அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்.
இன்று நடக்கும் தென்னாப்பிரிக்க டி20லீக் அரையிறுதி போட்டியில், பல திறமைகளுடன் பரபரப்பான மற்றும் ஆற்றல்மிக்க பவர்பிளே ஆட்டத்தை மிகுந்த உற்சாகத்துடன் ஜியோசினிமா, ஸ்போர்ட்18, கலர்ஸ் தமிழில் கண்டு மகிழலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket match, South Africa, T20