திருப்பு முனையான ஆந்த்ரே ரசல் அவுட்; 1 ரன்னில் வெற்றியைக் கோட்டை விட்ட வெஸ்ட் இண்டீஸ்; ‘சோக்கர்ஸ்’ ஆகாத தென் ஆப்பிரிக்கா; 

வென்ற மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்கா.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்காஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  • Share this:
    வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்க இடையே ஐந்து  20 ஓவர் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் 3-வது போட்டி  கிரேனடாவில் நடைபெற்றது.  முதலில் பேட்டிங்  செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிக படசமாக குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களைக் குவித்தது.

    கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் பயனில்லை:

    இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் ஃபேபியன் ஆலன் சிக்சர் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோற்றது. கடைசி 3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது அந்த அணியின் ரன் எண்ணிக்கையைக் குறைத்தது.  வெஸ்ட் இண்டீஸின் புதுவரவு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆபெட் மெக்காய் 4 ஓவர் 22 ரன் 4 விக்கெட் என்று அசத்தினார்.

    இந்த் வெற்றியின் மூலம் 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற  கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவர் முடிவில்தான் 16 பந்துகளில் 3 பயங்கர சிக்சர்களுடன் 25 ரன்கள் எடுத்த ஆந்த்ரே ரஸல் தாழ்வான புல்டாஸில் லாங் ஆனில் கேட்ச் ஆகி நார்ட்யே பந்தில் வெளியேறினார். இது திருப்பு முனையானது.



    இன்னொரு அதிரடி வீரர் நிகலஸ் பூரன் 15 ரன்களில் ஒருமுனையில் இருந்தார், ஃபேபியன் ஆலன் இறங்கினார். 18வது லுங்கி இங்கிடி  ஓவரின் 2வது பந்தை டீப் மிட்விக்கெட்டில் புல் ஷாட்டில் சிக்ஸ் விளாசினார். அந்த ஓவரில் 9 ரன்கள் வந்தது. 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீசுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போதுதான் நார்ட்யே 19வது ஓவரை மிகப்பிரமாதமாக வீசினார். பூரன், பெடல் ஸ்வீப் ஆடப்போய் எல்பி. ஆக அந்த ஓவரில் 4 ரன்கள்தான் வந்தது. நார்ட்யே 4 ஓவர் 29 ரன் 2 விக்கெட்.
    கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. பவுலர் ரபாடா. ஃபேபியன் ஆலன் ஸ்ட்ரைக் எடுத்தார். ஒரு வைடு ஒரு பவுண்டரி வந்தது. 2 பந்து டாட் பால், அருமையாக வீசினார் ரபாடா. இடையில் 2  ரன் எடுத்தார் ஆலன்.

    5வது பந்து அபாரமான யார்க்கர் ஆலன் கால்களுக்கு இடையே புகுந்து சென்றது. கடைசி பந்தில்  8 ரன் தேவை என்று ஆனது, கடைசி பந்தை ஆலன் டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்தார், ஆனால் பயனில்லை. ஒரு ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.
    முன்னதாக எவின் லூயிஸ் 21 பந்துகளில் 27 ரன்களையும் லெண்டில் சிம்மன்ஸ் 22 ரன்களையும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ஓவர்களில் 55 என்ற தொடக்கத்தைக் கண்டது. ஆனால் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. ஜேசன் ஹோல்டர், ஷிம்ரன் ஹெட்மையர் சுமாராகத் தொடங்கி இருவரும் 20 ரன்களுக்குள் லுங்கி இங்கிடி மற்றும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சியிடம் ஆட்டமிழந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கேப்டன் கிரன் பொலார்ட், ரபாடா பந்தில் இறங்கி வந்து அடிக்கிறேன் பேர்வழி என்று புல்டாஸை யார்க்கராக மாற்றிக் கொண்டு 1 ரன்னில் பவுல்டு ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 44 ரன்கள் தேவை. ஆண்ட்ரே ரஸல், நார்ட்யே பந்தில் தொடர்ந்து சிக்சர்களை விளாசினார். 3வது சிக்ஸ் அடிக்கப் போக பவுமா கேட்சை விட்டார். ஆனால் கடைசியில் 25 ரன்களில் நார்ட்யெவிடமே ஆட்டமிழந்தாலும் வெஸ்ட் இண்டீஸை வெற்றி பெறும் நிலைக்குக் கொண்டு வந்தார்.

    கடைசி ஓவரில் ஒன்றிரண்டு பந்துகளை தொட முடியாமல் ஃபேபியன் ஆலன் கோட்டை விட கடைசி பந்து சிக்சும் வீணாக ஒரு ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது. தப்ரைஸ் ஷம்சி 4 ஓவர் 13 ரன்கள் 2 விக்கெட் என்று சிக்கனத்தில் வெஸ்ட் இண்டீஸை முடக்கினார். இவரது  மிடில் ஓவர்கள்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தது.
    Published by:Muthukumar
    First published: