வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அண 8 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 2 ஆவது நாள் ஆட்டம் தொடர்கிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. நேற்று முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமாவும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரேக் ப்ராத்வெய்ட்டும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் எல்கரும், எய்டன் மார்க்ரமும் முதல் விக்கெட்டிற்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 71 ரன்னில் எல்கார் வெளியேற, எளிதாக ரன்கள் சேர்த்த மார்க்ரம் சதத்தை கடந்தார். டோனி டிசோர்சி 28 ரன்னிலும், கேப்டன் டெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 174 பந்துகளில் 18 பவுண்டரியுடன் எய்டன் மார்க்ரம் 115 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். 4 விக்கெட்டிற்கு 236 ரன்கள் என்ற வலுவான நிலையில் தென்னாப்பிரிக்க அணி இருந்தது.
இதன்பின்னர் சிறப்பாக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். கீகன் பீட்டர்சன் 14, விக்கெட் கீப்பர் ஹென்றிக் க்ளாசன் 20, செனுரன் முத்துசாமி 3 கசிகோ ரபடா 8 ரன்களில் வெளியேற, தென்னாப்பிரிக்க அணி 300 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழநதிருந்தது. நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்களை எடுத்திருக்கிறது. மார்கோ ஜேன்சன் 17 ரன்னுடனும், ஜெரால்டு கோயட்ஸீ 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket