Home /News /sports /

Ind vs SA | வெண் டர் டுசேன், பவ்மா அசத்தல் சதம்... இந்தியாவிற்கு 297 ரன்கள் இலக்கு

Ind vs SA | வெண் டர் டுசேன், பவ்மா அசத்தல் சதம்... இந்தியாவிற்கு 297 ரன்கள் இலக்கு

Ind vs SA

Ind vs SA

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெண் டர் டுசேளன், பவ்மா இருவரின் அசத்தலான சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி 296 ரன்கள் எடுத்துள்ளது.

    தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்காத காரணத்தால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகார் தவான், சஹல், வெங்கடேஸ் ஐயருக்கு இன்றையப் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. மேலும் 2 சுழற்பந்து, 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

    தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்கம் சற்று தடுமாற்றமாகவே இருந்தது. மலன் 6 ரன்னிலும், டி-காக் 27 ரன்னிலும் ஏய்டன் மார்கம் 4 ரன்னிலும் அவுட்டாகினர். தென்னாப்பிரிக்கா 18 ஓவர்கள் வரை 68 ரன்கள் மட்டுமே 3 விக்கெட்களை எடுத்து இருந்து.

    இதையடுத்து கேப்டன் பவ்மா உடன் 5-வது வீரராக களமிறங்கிய வெண் டர் டுசேன் சிறப்பான பார்டன்ர்ஷிப்பை அமைத்தார். இருவரும் பொறுமையாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில் இறுதி ஓவர்களில் அதிரடி காட்டி இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். இருவரும் அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியின் ரன்ரேட்டை உயர்தினர்.

    கேப்டன் பவ்மா 143 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் வெண் டர் டுசேன் அதிரடி சற்றும் குறையாமல் 96 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 296 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி