ஜனவரி 2023 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ரத்து செய்ததால் ஆஸ்திரேலியாவுக்கு ஒருநாள் சர்வதேச சூப்பர் லீக் பாயிண்ட்கள் வழங்கப்படவுள்ளன. இதனால் தென் ஆப்பிரிக்கா பங்கேற்க மறுக்கும் இந்தத் தொடரில் அந்த அணி 0-3 என்று தோற்றதாகக் கருதப்படும் பட்சத்தில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஒவர் உலகக்கோப்பைக்கு தென் ஆப்பிரிக்க அணி நேரடியாகத் தகுதி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே அட்டவணையில் 13 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்கா 11வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு இந்த 3 ஒருநாள் போட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா இந்தத் தொடரை ரத்து செய்தது. காரணம் தென் ஆப்பிரிக்காவில் புதிய டி20 லீக் ஜனவரியில் தொடங்குகிறது. ஐபிஎல் என்றால் ஐசிசி தனி சாளரம் ஒதுக்கிக் கொடுக்கும், பல தொடர்களை கேன்சல் செய்யும், ஆனால் பாவம் தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த செல்வாக்கு இல்லை, இதனால் ஒருநாள் தொடரை விட்டு விலகியதால் இப்போது 2023 உலகக்கோப்பை பங்கேற்பதே கடினமாகியுள்ளது.
ஒருவிதத்தில் இந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ரத்து செய்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் பிக் பாஷ் லீகில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல்-க்கு ஒரு சட்டம் மற்ற லீகுகளுக்கெல்லாம் சலுகையில்லாத கறார் சட்டம், இதுதான் ஐசிசியாக செயல்பட்டு வருகிறது. இதனால் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு அணி, அதுவும் அந்த ஏழை வாரியத்தின் நிதிவருவாயை தீர்மானிக்கும் தனியார் டி20 லீகா, அல்லது சர்வதேச போட்டிகளா என்று வரும்போது சர்வதேசப் போட்டிகளை தியாகம் செய்து, யுஏஇ, சிங்கப்பூர், உள்ளிட்ட சாதாரண அணிகளுடன் தகுதிச் சுற்றில் மோதித்தான் 2023 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் ஒரு அணியாக தென் ஆப்பிரிக்கா ஆகியிருப்பது வேதனை தருவதாகத்தான் உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, ICC world cup, South Africa