Home /News /sports /

Ind vs SA | தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு.... இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

Ind vs SA | தென்னாப்பிரிக்கா பேட்டிங் தேர்வு.... இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

Ind vs SA

Ind vs SA

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றிபெற்ற போதும், அடுத்த இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதையடுத்து, கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார். இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, பார்ல் நகரில் உள்ள மைதானத்தில், இன்று தொடங்கியது. ரோகித் சர்மாவுக்கு காயம் காரணமாக, ஒருநாள் போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஷிகார் தவான், வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுழல்பந்தில் அஸ்வின் மற்றும் சாஹல் இடம்பெற்றுள்னர்.

    இந்திய அணி : கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்

    தென்னாப்பிரிக்கா அணி : குயின்டன் டி காக்(w), ஜன்னேமன் மாலன், ஐடன் மார்க்ரம், ரஸ்ஸி வான் டெர் டுசென், டெம்பா பாவுமா(c), டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிங்டி

    இளம் வீரர்களை கொண்ட இந்தியா, பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் வலுவாக உள்ளது. கேப்டனாக இன்றி, 6 ஆண்டுகளுக்குப் பின், ஒரு வீரராக விராட் கோலி, இன்று களமிறங்குகிறார். அத்துடன், தன் மீதான விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி