தென்னாப்பிரிக்கா வீரர் ஹாசிம் அம்லா ஓய்வு அறிவிப்பு!

Vijay R | news18-tamil
Updated: August 8, 2019, 9:37 PM IST
தென்னாப்பிரிக்கா வீரர் ஹாசிம் அம்லா ஓய்வு அறிவிப்பு!
ஹாசிம் அம்லா
Vijay R | news18-tamil
Updated: August 8, 2019, 9:37 PM IST
தென்னாப்பிரிக்கா வீரர் ஹாசிம் அம்லா அனைத்துவிதமானகிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான ஹாசிம் அம்லா 124 டெஸ்ட் போட்டிகளிலும், 181 ஒரு நாள் போட்டிகளிலும், 44 டி20 பேட்டிகளிலும் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 9282 ரன்களும், ஒரு நாள் போட்டியில் 8113 ரன்களும், டி20 போட்டியில் 1277 ரன்களும் அடித்து உள்ளார்.

ஹாசிம் அம்லா 2004ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி மோசமான தோல்வியடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த தொடரில் ஹாசிம் அம்லா பெரியளவில் ரன் ஏதும் சேர்க்கவில்லை.

ஓய்வு குறித்து ஹசிம் அம்லா கூறிய போது, “முதலில் எனக்கு உத்வேகம் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த பயணத்தில் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி தவிர வேறொன்றும் இல்லை. என்னுடைய இந்த பயணம் பல பாடங்களை கற்று தந்துள்ளது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள், மிக முக்கியமாக ஒரு சகோதரத்துவத்தின் அன்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

எனது குடும்பத்தினர், நண்பர்கள், சகவீரர்கள் மற்றும் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடினமான காலங்களில் எங்களை உற்சாகப்படுத்தி எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் இருந்தார்கள்“ என்று அம்லா தெரிவித்தார்.
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...