Home /News /sports /

PAKvSA | டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

PAKvSA | டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

PAKvSA

PAKvSA

ICC World Cup 2019 | Pakistan vs South Africa | பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தள்ளது.

உலகக் கோப்பைத் தொடரின் 30-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன் லார்டஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 6 லீக் போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் பெரிய அளவில் சாதிக்காததால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.



பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா 3 போட்டிகளிலும், பாகிஸ்தான் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி