ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சிட்னி டெஸ்டை போராடி டிரா செய்த தென்னாப்பிரிக்க அணி… தொடரை வென்றது ஆஸ்திரேலியா

சிட்னி டெஸ்டை போராடி டிரா செய்த தென்னாப்பிரிக்க அணி… தொடரை வென்றது ஆஸ்திரேலியா

தோல்வியை தவிர்க்க போராடிய தென்னாப்பிரிக்க அணி

தோல்வியை தவிர்க்க போராடிய தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 108 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே எடுத்தால் ஃபாலோ ஆன் ஆனது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி போராடி டிரா செய்தது. ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 2 நாட்களில் முடிந்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், வல்லுனர்களின் கவனத்தை பெற்றது.

மெல்போர்னில் நடந்த 2ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த புதன் அன்று தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 2 நாட்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்களை எடுத்திருந்தது.

அந்த அணியின் உஸ்மான் கவாஜா 195 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 104 ரன்களும், ஹெட் 70 ரன்களும் எடுத்தனர். நேற்று முன்தினம் மழை காரணமாக 3ஆவது நாள் ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. இந்நிலையில் நேற்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றபோது, டிக்ளேர் செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.

நேற்றைய  4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 59 ஓவர்களை எதிர்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஹார்மர் மற்றும் மகராஜ் இணை 8 ஆவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஹார்மர் 165 பந்துகளில் 47 ரன்களும், மகராஜ் 81 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர்.

தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 108 ஓவர்களை எதிர்கொண்டு 10 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே எடுத்தால் ஃபாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.

‘இலங்கைக்கும் சூர்ய குமாருக்கும் இடையிலான போட்டியாக மாறிவிட்டது’ – கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம்

கேப்டன் டீன் எல்கர் 10 ரன்களில் வெளியேறினாலும், தொடக்க வீரர் சாரெல் எர்வீ 125 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். ஹெய்ன்ரிச் கிளாசன் 35 ரன்களை எடுத்தார்.

India vs Srilanka T20 : இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி…

41.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

First published:

Tags: Cricket