Home /News /sports /

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீச்சு... தென்னாப்பிரிக்காவுக்கு அபராதம் விதிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீச்சு... தென்னாப்பிரிக்காவுக்கு அபராதம் விதிப்பு

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்று விடாதா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

    இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்து வீசிய தென்னாப்பிரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டது.

    இதன்படி போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக பிடித்துக் கொள்ளப்படும். இது தொடர்பான அபராதத்தை ஆட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் விதித்துள்ளார்.

    ஐசிசி கிரிக்கெட் வீரர்கள் நடத்தை விதி 2.22-ன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, மேலதிகமான எந்த விசாரணையும நடத்தப்படாது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

    முன்னதாக ஓவர்கள் தாமதமாக வீசப்பட்டது தொடர்பான அறிக்கையை, அம்பையர்கள் மராய்ஸ் எராஸ்மஸ், ஆட்ரின் ஹோல்ஸ்டாக், 3வது அம்பைர் போங்கனி ஜேல் மற்றும் 4வது அம்பைர் அலாவுதீன் பலேகர் ஆகியோர் சமர்ப்பித்தனர்.

    அபராதம் விதிக்கப்பட்ட போதிலும், வலுவான இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றதால், தென்னாப்பிரிக்க அணியினர் உற்சாகத்தில் உள்ளனர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க 2-0 என்ற கணக்கில் வென்றது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களையும், கேப்டன் கே.எல்.ராகுல் 55 ரன்களையும் எடுத்தனர்.

    வெற்றி இலக்கான 288 ரன்களை தென்னாப்பிரிக்க அணி 48.1 ஓவரில் எட்டியது. அந்த அணியின் மலான் 108 பந்துகளை சந்தித்து 91 ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் 66 பந்துகளில் 78 ரன்களை எடுத்தார். இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்று விடாதா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Cricket

    அடுத்த செய்தி