#NZvSA | நியூசிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்கு!

இந்த போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் முழுத்திறனை வெளிப்படுத்த அந்த அணி நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை எடுக்க போராடியே தீரும்.

Web Desk | news18
Updated: June 19, 2019, 8:36 PM IST
#NZvSA | நியூசிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்
Web Desk | news18
Updated: June 19, 2019, 8:36 PM IST

#NZvSA  | நியூசிலாந்துக்கெதிரானப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்கள் இலக்காக கொடுத்துள்ளது.


உலகக் கோப்பைத் போட்டித் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே சறுக்கலை சந்தித்துள்ளது.

பிர்மிங்ஹாமில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

போட்டி தொடங்கும் முன்னரே மழை குறுக்கிட்டதால் போட்டியில் 49 ஓவராக குறைக்கப்பட்டது. இந்தநிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் முதலில் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தாலும், பின்னர், சீராக ரன்களைச் சேர்த்தனர்.

இறுதியாக 49 ஓவர்களுக்கு, 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 241 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்காக கொடுத்துள்ளது.

அதிக பட்சமாக ஹசிம் ஆம்லா 55 ரன்களும், ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன் 67 ரன்களும் எடுத்தனர்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி பின்தங்கியுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த 4 போட்டிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் தென்னாப்பிரிக்கா உள்ளது.

இந்த போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் முழுத்திறனை வெளிப்படுத்த அந்த அணி நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை எடுக்க போராடியே தீரும்.

Also Watch: வேலைக்கு ஏன் போகவில்லை? கேள்வி கேட்ட கர்ப்பிணியை கொலை செய்த கணவர்!

First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...