ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பயிற்சி மைதானம் தூரம்.. உணவுக்கூட சரியில்லை - இந்திய வீரர்கள் அதிருப்தி

பயிற்சி மைதானம் தூரம்.. உணவுக்கூட சரியில்லை - இந்திய வீரர்கள் அதிருப்தி

இந்திய அணி

இந்திய அணி

சிட்னியில் இருக்கும் இந்திய அணி, பயிற்சி பெற 42 கி.மீ தொலைவில் உள்ள பிளாக்டவுனில் உள்ள மைதானம் ஒதுக்கியுள்ளதால், அவர்கள் பயிற்சி பெற செல்லவில்லை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustraliaAustraliaAustralia

  டி20 உலககோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் இந்தியாவும் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த போட்டிக்கு தயாராகி வரும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முடிந்தபின், அவர்களுக்கு சாண்விட்ச் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும், அந்த உணவு கூட சூடாக இல்லாமல் இருந்தது என்று ஐசிசியிடம் இந்திய அணி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

  மேலும் தற்போது சிட்னியில் இருக்கும் இந்திய அணி, பயிற்சி பெற 42 கி.மீ தொலைவில் உள்ள பிளாக்டவுனில் உள்ள மைதானம் ஒதுக்கியுள்ளதால், அவர்கள் பயிற்சி பெற செல்லவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Australia, BCCI, ICC, Indian cricket team, Rohit sharma