ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20ல் அடிவாங்கிய இந்தியா.. சீனியர் வீரர்களை கழற்றிவிட போகிறதா பிசிசிஐ?

டி20ல் அடிவாங்கிய இந்தியா.. சீனியர் வீரர்களை கழற்றிவிட போகிறதா பிசிசிஐ?

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

அடுத்த ஆண்டிற்கான டி-20 அணியில் தற்போது இருக்கும் பெரும்பாலான சீனியர் வீரர்களை கழற்றிவிட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  அடுத்த ஆண்டிற்கான டி-20 அணியில் தற்போது இருக்கும் பெரும்பாலான சீனியர் வீரர்களை கழற்றிவிட இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி-20 உலகோப்பை போட்டியில் இருந்து அரையிறுதியில் வெளியேறி இந்தியா பெரிய அளவிலான ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சீனியர் வீரர்கள் பொறுப்பாக விளையாடவில்லை என விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பவர் பிளேயில் வீரர்கள் வெளிப்படுத்திய மந்தமான ஆட்டம் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பலவீனமான அணிகளுக்கு எதிராக தனது மூர்க்கமன ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் முக்கியமான அணிகளுக்கு எதிராக மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்கள்.

  இந்நிலையில், அடுத்த டி-20 உலக கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைப்பதில் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. விமர்சனங்களுக்கு உள்ளான சீனியர் வீரர்களை அணியில் இருந்து கழற்றிவிட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அடுத்த டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் யாரையும் பிசிசிஐ நீக்கம் செய்வதில்லை. தாங்களாகவே தங்கள் ஓய்வை வீரர்கள் அறிவித்து வருகிறார்கள். அதனால் டி-20 அணியில் இருந்து சீனியர் வீரர்களை தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்குமாறு வலியுறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓரங்கட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டி-20 போட்டிகள் தவிர்த்து ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சீனியர் வீரர்களை பயன்படுத்திக் கொள்ளவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

  இதையும் படிக்க :  உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆப்பு வைக்கும் கனமழை.! மெல்போர்னில் மிரட்டும் வானிலை.. ஐசிசி சொல்வது என்ன?

  இளம் வீரர் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய, இளமையான அணி டி-20 போட்டிக்காக உருவாக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உலக கோப்பை டி-20 போட்டிகள் நடைபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இப்போதே இது குறித்து பேசவும், முடிவெடுக்கவும் தேவையில்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு போட்டியில் சொதப்பினால் எல்லா போட்டிகளிலும் சொதப்புவார்கள் என்பது அர்த்தம் இல்லை. இன்னும் ஏராளமான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அந்தப் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகளை கொண்டு அணி கட்டமைக்கப்படுவதை முடிவு செய்யலாம் எனவும் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றபிறகு, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவக், அடுத்த டி-20 உலக கோப்பை போட்டியின்  போது, இப்போது அணியில் இருக்கும் சில முகங்களை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் தோனியின் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட அணி 2007ஆம் ஆண்டு டி-20 உலக கோப்பையை வென்றதையும் சேவாக் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: BCCI, Cricket, Indian cricket team