ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியாசமான பதிலளித்த சவுரவ் கங்குலி!

கங்குலி - ரவி சாஸ்திரி

  • Share this:
பிசிசிஐ தலைவராக தேர்வாகி உள்ள சவுரவ் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரவிசாஸ்திரி குறித்த கேள்விக்கு வித்தியசமான பதிலளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தேர்வாகி உள்ளார். வரும் 23ம் தேதி தலைவர் பதவியில் பொறுப்பேற்க உள்ள கங்குலி இந்திய கிரிக்கெட் வாரியத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கங்குலியுடன் ஜெய் ஷா, அருண் துமல், ஜெயேஷ் ஜார்ஜ், மஹிம் வர்மா ஆகியோரும் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்க உள்ளனர்.

மேலும் தோனியின் எதிர்காலம் குறித்து அவரிடம் மற்றும் தேர்வு குழுவினர் பேச உள்ளதாகாவும் கங்குலி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் செய்திளார்களை சந்தித்த கங்குலியிடம், தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் பேசி உள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்து கொண்டே“ஏன்? இப்போது என்ன அவர் செய்துள்ளார்“ என்றார்.

கங்குலியும் ரவிசாஸ்திரியும் நேருக்கு நேர் எந்தவித பிரச்னையிலும் ஈடுப்படவில்லை என்றாலும் அவர்களுக்குள் சிறு விரிசல் உள்ளது. இந்திய அணியின் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் இவர்கள் இருந்த போது கருத்து வேறுபாடு நிலவியது சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch

Published by:Vijay R
First published: