பி.சி.சி.ஐ தலைவர் பதவியால் பல கோடி ரூபாய் வருமானத்தை இழக்கும் சவுரவ் கங்குலி!

கிரிக்கெட் வர்ணனையாளர், ஐ.பி.எல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகர், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நிபுணர் என பல பரிமாணங்களில் கங்குலி இருந்து வருகிறார்.

பி.சி.சி.ஐ தலைவர் பதவியால் பல கோடி ரூபாய் வருமானத்தை இழக்கும் சவுரவ் கங்குலி!
சவுரவ் கங்குலி
  • Share this:
பிசிசிஐ-ன் புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்பதின் மூலமாக பல கோடி ரூபாய் வருமானத்தை அவர் இழக்க நேரிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ-ன் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். சவுரவ் கங்குலி இந்த பதவியில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிப்பார்.

சவுரவ் கங்குலி தற்போது டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளர், ஐ.பி.எல் தொடரில் டெல்லி கிரிக்கெட் அணியின் ஆலோசகர், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நிபுணர் என பல பரிமாணங்களில் கங்குலி இருந்து வருகிறார்.


பிசிசிஐ தலைவராக அவர் பதவியேற்கும் பட்சசத்தில் இந்த அனைத்துலிருந்தும் அவர் விலக வேண்டும். இதன் மூலம் சுமார் 7 கோடி ரூபாய் வருமானத்தை அவர் இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் பிசிசிஐ தலைவராக தேர்வாகும்பட்சத்தில் எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக அவரை தேர்வு செய்ய முடியாது என்பது குறிப்பிடதக்கது.

Also Watch
First published: October 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading