இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, மூத்த டெஸ்ட் ஜோடியான சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு திரும்பி, தங்களது பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார். புஜாரா மற்றும் ரஹானே இருவருமே கடினமான நிலையில் உள்ளனர், மேலும் பல கிரிக்கெட் விமர்சகர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி மற்றும் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு இந்தியா வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
புஜாரா தனது கடைசி டெஸ்ட் சதத்தை 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அடித்தார், மேலும் அவர் கடந்த 16 டெஸ்டில் 27.93 என்ற சராசரியில் வெறும் 810 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த ஆண்டு 13 போட்டிகளில் 20.82 சராசரியில் 479 ரன்களை அடித்ததால், பார்ம் இல்லாத ரஹானே தன் டெஸ்ட் துணைக் கேப்டன் பதவியை இழந்தார்.
ரகானே, புஜாரா சிறந்த வீரர்கள் என்று கங்குலி கருதுவதால், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதன் மூலம் மீண்டும் தங்கள் ஃபார்மைப் பெற ஆதரித்துள்ளார்.
ஆம், அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு சென்று நிறைய ரன்களை எடுப்பார்கள் என்று நம்புகிறேன், அதை அவர்கள் நிச்சயம் செய்வார்கள். அவ்வளவு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பிறகு அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை,"
Also Read: மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை மீதான ராகுல் காந்தியின் விமர்சனத்தை ஏற்க மாட்டோம்- அமெரிக்கா
ரஞ்சி டிராபி ஒரு பெரிய போட்டி, நாங்கள் அனைவரும் போட்டியில் விளையாடியுள்ளோம். அதனால், அவர்களும் அங்கு திரும்பிச் சென்று சிறப்பாக ஆட வேண்டும். அவர்கள் கடந்த காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் போது ரஞ்ஜியில்விளையாடியுள்ளனர். அப்போதும் சரி இப்போதும் சரி இவர்கள் இருவரும் ODI அல்லது 20 ஓவர்கள் கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை. அதனால் பிரச்சனை இருக்காது"
இவ்வாறு கூறியுள்ளார் கங்குலி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.