போட்டியின் முதல் பந்தை தவிர்க்கும் சச்சின் - கங்குலி உடைத்த ரகசியம்

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், ஓப்பனிங் இறங்கும் போது, முதலில் பேட்டிங் செய்யாததற்கான சுவாரஸ்யமான காரணத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பகிர்ந்துள்ளார்.

போட்டியின் முதல் பந்தை தவிர்க்கும் சச்சின் - கங்குலி உடைத்த ரகசியம்
சச்சின் கங்குலி
  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இருவரும், இந்திய அணிக்காக, பல போட்டிகளில் ஓப்பனர்களாக களமிறங்கி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளில் 136 முறை தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இருவரும் ஜோடி போட்டு 6,609 ரன்களைக் குவித்துள்ளனர். 2001 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இருவரும் 258 ரன்கள் அடித்ததே உச்சபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.

சச்சின் டெண்டுல்கர்இந்தநிலையில் அவர்கள் ஜோடி போட்டு இறங்கும்போது, முதல் பந்தை விளையாட எப்போதும் சச்சின் முற்படமாட்டார். இது ஏன் என்ற ரகசியத்தைப் இன்று போட்டுடைத்துள்ளார் கங்குலி. இந்திய அணியின் தற்போதைய தொடக்க வீரர்களில் ஒருவரான மயான்க் அகர்வாலுடனான நேர்காணலில் இதுகுறித்து மனம் திறந்து பேசிய கங்குலி, சச்சின் முதல் பந்தை விளையாட வேண்டும் என்று தான் அவரிடம் கூறியபோது, அவர் இரண்டு பதில்களை கூறுவார் என்று தெரிவித்துள்ளார்.

அதில் ஒன்று, நல்ல ஃபார்மில் இருந்தால் நான்-ஸ்டிரைக்கர் (Non-Striker) ஆகவே தொடர வேண்டும் என்று சச்சின் கூறுவார் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நல்ல பேட்டிங் ஃபார்மில் இல்லையென்றால், முதல் பந்தை விளையாடமல் இருந்து அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவார் என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...

தோனி பிறந்தநாள் - உணர்ச்சி பொங்க பாடலை பரிசளித்த பிராவோ

எப்போதாவது அவரைத் தாண்டி சென்று நான்-ஸ்டிரைக்கர் ஆக நின்றுவிட்டால் வேறு வழியில்லாமல் முதல் பந்தை ஆடுவார் சச்சின் என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார் கங்குலி
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading