Home /News /sports /

இங்கிலாந்து தொடர் சக்சஸ்- கோலியை சிறப்பாகக் குறிப்பிட்ட கங்குலி

இங்கிலாந்து தொடர் சக்சஸ்- கோலியை சிறப்பாகக் குறிப்பிட்ட கங்குலி

கங்குலி

கங்குலி

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஓல்ட் ட்ராபர்டில் இந்தியா அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது, டி20 தொடரை வென்றது இதோடு, டெஸ்ட் தொடரை 2-2 என்று சமன் செய்தது தொடர்பாக இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டை பாராடிய கங்குலி, கோலியை சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்கவும் ...

    ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் 4 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் அதிரடியாக 71 ரன்களையும் எடுக்க ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் தன் முதல் சதத்தை எடுத்தார். 80 ரன்களுக்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் பாண்டியா, ரிஷப் பண்ட் சதக்கூட்டணி அமைத்தனர், கடைசியில் டேவிட் வில்லேயை ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் விளாசி சாதனை புரிந்தார் ரிஷப் பண்ட்.

    இந்தவெற்றிகள் குறித்து கங்குலி தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    பேட்டிங்கை பொறுத்தவரை சில காலமாகவே மோசமான தொடர்களை சந்தித்த விராட் கோலிக்கு இந்த இங்கிலாந்து தொடர் ஆக மோசமக அமைந்தது, ஆனால் கங்குலி அவரைக் குறிப்பிட்டதற்குக் காரணம் இந்த இங்கிலாந்து தொடரின் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்சியில்தான் இந்தியா 2-1 என்று முன்னிலையில் இருந்தது, எனவே தொடரை பும்ரா கேப்டன்சியில் ட்ரா செய்வதற்கு விராட் கோலியின் கேப்டன்சியில் பெற்ற 2 வெற்றிகள்தான் காரணம் என்பதால் கங்குலி கோலியை குறிப்பிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    கங்குலி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘சூப்பர் ஆட்டம், அவர்கள் நாட்டில் இது எளிதல்ல, டெஸ்ட் தொடர் சமன், ஒருநாள், டி20-களில் வெற்றி வெல்டன் திராவிட், ரோஹித் சர்மா, ரவி சாஸ்திரி, விராட் கோலி. ரிஷப் பண்ட் ஸ்பெஷல் ‘ என்று பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hardik Pandya, India Vs England, Rishabh pant, Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி