தோனி இப்படி செய்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை - கங்குலி ஓபன் டாக்

கங்குலி - தோனி

இந்திய வீரர் மயங்க் அகர்வாலுடன் ஆன்லைனில் உரையாடிய கங்குலி தோனி குறித்த சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இந்திய வீரர் மயங்க் அகர்வால் 'ஓபன் நெட்ஸ் வித் மயங்க்'(open nets with mayank)  என்ற ஆன்லைன் தொடரில் கிரிக்கெட் பிரபலங்கள் உடன் உரையாடி வருகிறார். அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியிடம் உரையாடினார்.

  அப்போது 2008-ம் ஆண்டு நடைபெற்ற கங்குலியின் கடைசி டெஸ்ட் போட்டி குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிரிந்து கொண்டார். 2008-ம் ஆண்டு நாக்பூரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி தான் கங்குலியின் கடைசி டெஸ்ட். இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னரே கங்குலி தனது ஓய்வு குறித்து அறிவித்திருந்தார்.

  அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. வெற்றியுடன் கங்குலிக்கு விடைகொடுத்தது இந்திய அணி. இந்த போட்டியின் கடைசி தருணத்தில் கங்குலிக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து அணியை வழிநடத்துமாறு தோனி கௌரவப்படுத்தினார்.  இந்த தருணத்தை மறக்க முடியாது என்று மயங்க் அகர்வாலிடம் கங்குலி கூறினார். கங்குலி கூறுகையில்,  ''எனது கடைசி டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டியின் இறுதி நாள், கடைசி சீசனுக்காக நான் விர்தபா ஸ்டேடியத்தின் படிகளில் இறங்கி வந்தேன். இந்திய வீரர்கள் அணிவகுத்து நின்று என்னை வரவேற்றார்கள்.

  தோனி என்னிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்தார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தோனி இப்படி செய்வார் என்று நான் நினைக்கவில்லை. அதான் தோனி. அந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். எனது கவனம் முழுவதும் எனது ஓய்வு குறித்த சிந்தனையில் இருந்தது. கடைசி 3, 4 ஓவர்களின் நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை“ என்றார்.
  Published by:Vijay R
  First published: