சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியிலிருந்து தப்பியதற்குக் காரணம் இந்திய அணி வீரர்களின் சிலர் காயங்களே. இல்லையெனில் சிட்னி டெஸ்ட் போட்டியில் 1974-75ம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினைப் போல் மிகப்பெரிய அதிர்ச்சி வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கும்.
எனவே ஆஸ்திரேலியாதான் போராடி டிரா செய்தது என்றே கூற வேண்டும்.
இந்நிலையில் இந்த டிரா பற்றி கங்குலி கூறும்போது, நிச்சயம் நாம் அஸ்வின், புஜாரா, ரிஷப் பந்த் ஆகியோரது முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருப்போம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது நாம் பந்த், புஜாரா, அஸ்வின் ஆகியோரது முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டிருப்போம் என்று நினைக்கிறேன்.
உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சுக்கு எதிராக 3ம் நிலையில் இறங்கி (புஜாரா), ஆடுவது சாதாரணமல்ல, அதே போல் 400 விக்கெட்டுகள் சும்மா வந்து விடாது, வெல் ஃபாட் இந்தியா, தொடரை வெல்ல இதுவே தருணம்” என்று பதிவிட்டுள்ளார் கங்குலி.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.