இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
திங்கள் இரவு கங்குலிக்கு மோனோ குளோனல் ஆன்ட்டிபாடி காக் டெயில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உடல் நிலை சீராக உள்ளதாக அவர் அனுமதிக்கப்பட்ட உட்லேண்ட்ஸ் மருத்துவமனை தன் மருத்துவ அறிக்கையில் கூறியுள்ளது. கங்குலிக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டதில் இரண்டு ஸ்டெண்ட்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவிட் 19 கங்குலிக்கு தொற்றியவுடன் அவருக்கு மிதமான அறிகுறிகள் காணப்பட்டன. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நெருக்கமான கண்காணிப்பில் இருந்து வருகிறார். கங்குலியின் ரத்த மாதிரிகள் மரபணு தொடர் வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு அவருக்கு புதிய வேரியண்ட் ஆன ஓமைக்ரான் தொற்றியிருக்கிறதா என்பதைக் கண்டறியவுள்ளனர்.
இப்போதைக்கு உடல் ரத்த சுழற்சி, இருதய ரத்த பம்ப்பிங் ஆகியவை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கங்குலியின் அண்ணன் ஸ்னேகஷிஷ் கங்குலி கூறும்போது, “சவுரவ் உடல் நிலை சீராக உள்ளது, அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி இதற்கு முன்னால் செய்யப்பட்டதால், இப்போது கோவிட் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கையாக உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கங்குலியின் அண்ணனுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட் வந்தது. இந்த ஆண்டில் கங்குலி 3வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டது, அதாவது அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.
கொஞ்ச நாளைக்குப் பிறகு மீண்டும் இருதய அசவுகரியம் ஏற்பட மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 28ம் தேதி இன்னொரு ஆஞ்சியோ பிளாஸ்டியும் செய்யப்பட்டது. இதில் இரண்டு இருதய ரத்தக் குழாய்களில் இரண்டு ஸ்டெண்ட்கள் வைக்கப்பட்டன. தாதா கங்குலி 2 தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: லுங்கி இங்கிடி 6 விக்கெட்- இந்தியா 327 ரன்களுக்கு அதிர்ச்சி ஆல் அவுட்
செவ்வாயான்று இந்தியாவில் புதிதாக 6,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. மரண விகிதம் 293 ஆக அதிகரித்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி 4,80,000 பேர்களுக்கும் மேல் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona positive, Sourav Ganguly