சகோதரருக்கு கொரோனா பாதிப்பு: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

தனது சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சவுரவ் கங்குலி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 • Share this:
  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் சினேகஷிஷ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கங்குலியின் சகோதரர் சினேகஷிஷ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சினேகஷிஷ்வின் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  அப்போது சினேகஷிஷ் கங்குலிக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் அறிவிக்கப்பட்டது. தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சவுரவ் கங்குலியின் இல்லத்தில் அவர் இருந்து வந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் கங்குலியின் பிறந்த நாள் கொண்டாடத்தின் போது அவரது சகோதரர் சினேகஷிஷ் உடன் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

  சினேகஷிஷ் கங்குலி கடந்த ஒரிரு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தால் அவர் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் அவரை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

  அவரது குடும்பம் கொல்கத்தாவின் மொமின்பூர் எனும் இடத்தில் வசித்து வருகின்றனர். கங்குலி மற்றும் அவரது குடும்பம் அவர்களது பூர்வீக இல்லத்தில் வசித்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: