• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கங்குலி உடல் நலம் சீராக உள்ளது: ஸ்ட்ரெச்சர், வீல் சேர் இல்லாமல் நடந்தே சென்ற கங்குலி

கங்குலி உடல் நலம் சீராக உள்ளது: ஸ்ட்ரெச்சர், வீல் சேர் இல்லாமல் நடந்தே சென்ற கங்குலி

மருத்துவமனைக்கு வந்த கங்குலி

மருத்துவமனைக்கு வந்த கங்குலி

பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனும் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  • Share this:
    பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனும் தாதா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மதியம் 2 மணியளவில் கொல்கத்தா அப்பல்லோ மருத்துவமனைக்கு கங்குலி லேசான நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார், அங்கு சிறப்பு இருதய மருத்துவ நிபுணர்கள் சிகிச்சைக்காக தயாராக இருந்தனர்.

    கங்குலி மருத்துவமனைக்கு சிறப்பு எமர்ஜென்சி வழியாக அழைத்து வரப்பட்ட போது வீல் சேர், ஸ்ட்ரெச்சர் தேவையில்லை என்று நடந்தே சென்று அட்மிட் ஆனார்.

    தற்போது அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரது உடல்நிலையை இருதய நோய் நிபுணர்கள் அப்தாப் கான், சரோஜ் மோண்டல் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.

    அவருக்கு மீண்டும் கரோனரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா கங்குலியின் உடல்நலத்தை விசாரித்தார்.

    சவுரவ் கங்குலி குடும்பத்தினருக்கு இருதய நோய்கள் இருக்கும் வரலாறு உண்டு. இவரது தற்போதைய உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை, “கங்குலி இருதய செக்-அப்புக்காக வந்துள்ளார். கடந்த முறை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை அவரது உடல்நல, இருதய ஆரோக்கியத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. அவரது உயிர்காப்பு உடல் செயல்பாடுகள் சீராகவே உள்ளன என்று கூறியுள்ளது.

    பலரும் கங்குலி விரைவில் நலமுடன் திரும்ப பிரார்த்தனை சமூக ஊடகங்களில் குவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: