இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி கடந்த 2019 அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக பதவியேற்று கொண்டார். கொரோனா தொற்றுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை சிறப்பாக நடத்தி பாராட்டுகளை பெற்றவர் கங்குலி. மேற்கு வங்கத்தை சேர்ந்த கங்குலிக்கு நாடு முழுவதும் இன்றும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
இந்நிலையில் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. சவுரவ் கங்குலியும் தனது ட்விட்டர் பக்கத்தில்> 1992 முதல் இன்று வரை 30 வருடங்களாக நான் கிரிக்கெட்டில் இருந்துள்ளேன். இந்த பயணத்தில் எனக்கு உதவியாக, ஆதரவாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் இன்று முதல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அது பலருக்கு ஆதவராக இருக்கும் என்று பதிவிட்டு இருந்தார்.
இதனால் கங்குலி பிசிசிஐ தலைர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஈடுபடலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்த தகவலை மறுத்துள்ளார். பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்யவில்லை என்றும் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் சவுரவ் கங்குலி வீட்டிற்குச் சென்று இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டார். இதையடுத்து கங்குலி அரசியலில் ஈடுபடலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதையடுத்து கங்குலியோ அல்லது அவரது மனைவியோ மாநிலங்களவை உறுப்பினராகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.