ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒருநாள், டி20-களுக்கு 2 கேப்டன்கள் இருக்க முடியாது- கோலி நீக்கம் குறித்து கங்குலி

ஒருநாள், டி20-களுக்கு 2 கேப்டன்கள் இருக்க முடியாது- கோலி நீக்கம் குறித்து கங்குலி

கங்குலி- கோலி

கங்குலி- கோலி

ஆம்! இது குறித்து நானும் விராட் கோலியிடம் பேசினேன், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவும் பேசினார். அதன் பிறகு விராட் கோலி ஏற்றுக்கொண்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விராட் கோலி ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை ஓபனாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார், இது பல விமர்சனங்களையும் வரவேற்புகளையும் ஒருங்கே கிளப்பியது.

இந்நிலையில் கங்குலி கூறும் காரணம் என்னவெனில், டி20 கேப்டன்சியை உதற வேண்டாம் என்று கோலியிடம் பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கேட்கவில்லை என்றும் கூறுகிறார் கங்குலி. ஏனெனில் அவர் டி20-யிலிருந்து மட்டும் விலகினால் போதாது ஒருநாள் கேப்டன்சியையும் உதற வேண்டும், ஒருநாள் போட்டி, டி20 போட்டி இரண்டுக்கும் வேறு வேறு கேப்டன்கள் வைக்க முடியாது.

அதனால் கோலியை ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டியதாயிற்ற்று என்கிறார் கங்குலி, “டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கேட்டோம், அவர் அதற்கு இணங்கவில்லை. எனவே தேர்வுக்குழுவினர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கே 2 கேப்டன்களை வைத்து கொண்டிருக்க முடியாது என்று முடிவெடுத்து கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கி விட்டனர்” என்றார்.

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக கோலியின் சக்சஸ் விகிதம் பெரியது. வெற்றி-தோல்வி விகிதத்தில் வெற்றி விகிதம் அதிகம் உள்ள 4வது ஒரு நாள் கேப்டனாவார் கோலி.

இது பற்றி கங்குலி கூறும்போது, “ஆம், நாங்களும் அதைப் பரிசீலித்தோம், ஆனால் ரோகித் சர்மாவின் ரெக்கார்டைப் பாருங்கள், 10 போட்டிகளில் 8 வெற்றிகள். ஆனல் இதெல்லாம் இல்லை, ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் டி20 கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்களை வைத்துக் கொள்ள முடியாது என்பதே அடிப்படை.

மேலும் இந்த விவகாரத்தில் என்ன விவாதிக்கப்பட்டது, தேர்வுக்குழுவினர் முடிவு எப்படி எடுத்தனர் என்பதையெல்லாம் நான் கூற முடியாது. 2 கேப்டன்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு இருக்க முடியாது என்பதுதான் அடிநாதம், விராட் கோலியும் இதை ஏற்றுக் கொண்டார்.

Also Read: 1983 உலகக்கோப்பையை வென்று ஓராண்டில் கேப்டன்சியிலிருந்து தூக்கப்பட்ட கபில் தேவ் முதல் விராட் கோலி வரை

ஆம்! இது குறித்து நானும் விராட் கோலியிடம் பேசினேன், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவும் பேசினார். அதன் பிறகு விராட் கோலி ஏற்றுக்கொண்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

First published:

Tags: Rohit sharma, Sourav Ganguly, Virat Kohli