Home » News » Sports » CRICKET SOURAV GANGULY FEATURING FORTUNE OIL ADVERTISEMENTS PULLED DOWN BY ADANI WILMAR MUT

மாரடைப்பு காரணமாக கங்குலி தோன்றும் சமையல் எண்ணெய் விளம்பரங்களை நிறுத்திய அதானி நிறுவனம்

இருதய ஆரோக்கியம் பற்றி கங்குலி பேசி உங்கள் சமையல் எண்ணெய்க்கு விளம்பரம் செய்கிறார் அவருக்கே மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது என்று ட்ரோல் செய்யத் தொடங்கியதையடுத்து கங்குலி நடித்த விளம்பரங்களை நிறுத்தியது.

மாரடைப்பு காரணமாக கங்குலி தோன்றும் சமையல் எண்ணெய் விளம்பரங்களை நிறுத்திய அதானி நிறுவனம்
சவுரவ் கங்குலி.
  • Share this:
ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் ஆயில் என்ற சமையல் எண்ணெய்க்கு விளம்பரத் தூதராக ‘தாதா’ சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு அதானி வில்மர் விளம்பரங்களில் தோன்றி அந்தப் பொருளை விளம்பரப்படுத்தி வந்தார்.

அந்த விளம்பரத்தில் இருதய ஆரோக்கியம் பற்றி கங்குலி பேசுவதாக இருக்கும், ஆனால் அவருக்கே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சமூக வலைத்தளவாசிகள் இருதய ஆரோக்கியம் பற்றி கங்குலி பேசி உங்கள் சமையல் எண்ணெய்க்கு விளம்பரம் செய்கிறார் அவருக்கே மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது என்று ட்ரோல் செய்யத் தொடங்கியதையடுத்து கங்குலி நடித்த விளம்பரங்களை நிறுத்தியது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத் இந்த சமையல் எண்ணெயை கங்குலி விளம்பரம் செய்ததற்காக, “தாதா, விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். எப்போதும் நன்கு சோதிக்கப்பட்ட நல்ல பொருட்களுக்கு விளம்பரம் கொடுங்கள், தன்னுணர்வுடன் செயல்படுங்கள், கவனமாக இருங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக கங்குலி” என்று ட்வீட் செய்துள்ளதும் எரியும் நெருப்பில் எண்ணெயை விட்டது போல் ஆனது.


கங்குலி அந்த ஃபார்ச்சூன் ரைஸ் பிரான் விளம்பரத்தில், “உங்கள் 40 வயதுகளிலும் கூட உங்கள் வாழ்க்கையை முழுதும் அனுபவிக்கலாம். உங்கள் நோய் எதிர்ப்பாற்றல் இருதய வலிமையை உறுதி செய்து கொள்ளுங்கள். அது இந்த எண்ணெய் மூலம் தொடங்கட்டும். கொலஸ்டராலை குறைக்கும் இந்த எண்ணெய்க்கு மாறுங்கள், இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் உங்கள் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கிறது” என்று கூறுவார்.

அதானி வில்மர் என்ற நிறுவனம் தொழிலதிபர் கவுதம் அதானியுடையது. பிராண்டட் ரைச் ஆயில் சந்தையில் அதானியின் இந்த பிராண்ட் முன்னிலை வகிக்கிறது. சுமார் 1.2 மில்லியன் டன் பிராண்டட் சமையல் எண்ணெய் சந்தையில் அதானி நிறுவனத்தின் இந்த ஃபார்ச்சூன் ஆயில் 35% சந்தையை ஆக்ரமித்துள்ளது.

இந்நிலையில் எண்ணெயை விளம்பரப்படுத்துபவருக்கே இருதய நோய் ஏற்பட்டிருப்பதால் விளம்பரங்களை அதானி வில்மர் நிறுத்தியுள்ளது.
First published: January 5, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories