Home /News /sports /

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சவுரவ் கங்குலி

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

Sourav Ganguly | சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் காணப்பட்டதை அடுது்து அவர் பரிசோதனை மேற்கொண்டார்.

  • News18
  • Last Updated :
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

    பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கடந்த 28-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் காணப்பட்டதை அடுது்து அவர் பரிசோதனை மேற்கொண்டார். கங்குலிக்கு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கங்கலியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது.

    இந்நிலையில் சவுரவ் கங்குலி கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இன்னும் சில நாட்களுக்கு அவரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறுவுறித்துள்ளனர். கங்குலி 2 தடுப்பூசி டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி