கங்குலிக்கு மைக்கேல் வானின் ‘வயிற்றெரிச்சல்’ பதில்

மைக்கேல் வான் - கங்குலி.

இந்திய அணி இப்போது மற்ற அணிகளை விட கொஞ்சம் உயரத்தில் உள்ளது என்று சவுரவ் கங்குலி ஓவல் வெற்றியைப் பாராட்டி ட்வீட் செய்ய அதற்கு மைக்கே வான் தன் வயிற்றெரிச்சலைக் காட்டும் விதமாகப் பதிலளித்துள்ளார்.

 • Share this:
  இந்திய அணி இப்போது மற்ற அணிகளை விட கொஞ்சம் உயரத்தில் உள்ளது என்று சவுரவ் கங்குலி ஓவல் வெற்றியைப் பாராட்டி ட்வீட் செய்ய அதற்கு மைக்கே வான் தன் வயிற்றெரிச்சலைக் காட்டும் விதமாகப் பதிலளித்துள்ளார்.

  மைக்கேல் வான் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு பவர் ஹவுஸ் ஆக இருப்பதையும் கிரிக்கெட் சம்பந்தமான விஷயங்களில் ஐசிசியை ஆட்டிப்படைப்பது பிசிசிஐ என்ற அடிப்படையிலும் இந்திய வீரர்கள் பணக்காரரக்ள் என்ற அடிப்படையிலும் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் பிசிசிஐ நிறைய சம்பாதிக்கிறது என்றும் ஏகப்பட்ட வயிற்றெரிச்சலை அவர் இந்தியா மீது கொண்டுள்ளார்.

  விராட் கோலியை எப்போதும் நெகட்டிவ் ஆகவே பார்ப்பார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து வென்றதைக் கொண்டாடித்தள்ளினார். கேன் வில்லியம்சனைப் புகழும்போதெல்லாம் தேவையில்லாமல் விராட் கோலியை வம்புக்கு இழுத்து கேன் வில்லியம்சன் இந்தியராக இருந்திருந்தால் புகழப்பட்டுள்ளார் என்றும் இந்திய ஊடகங்களுக்கு எப்போதும் ஹீரோ ஒர்ஷிப்தான் முக்கியம் என்றும் விராட்கோலி, தோனி என்று ஆளுமைகள் பின்னால் அலைபவர்கள் என்றும் பலப்பல விதமாக இந்தியாவை விமர்சித்து வருபவர் மைக்கேல் வான்.

  இந்நிலையில் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துல்லியத் தாக்குதலில் இங்கிலாந்து மடிந்து தோல்வி தழுவியது 100/0 என்ற நிலையிலிருந்து 110 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி கண்டது, இந்நிலையில் ஷேன் வார்ன், நாசர் ஹுசைன் உட்பட பலரும் கோலியை விதந்தொதி வருகின்றனர்.

  கங்குலி தன் ட்வீட்டில், “கிரேட் ஷோ, திறமைதான் வித்தியாசம், ஆனால் மிகப்பெரிய வித்தியாசம் பிரஷரை உறிஞ்சிக் கொள்ளும் திறமையாகும். இந்திய அணி மற்ற அணிகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதல் உயரத்தில் உள்ளது” என்று பதிவிட்டிருந்தார், இதற்குப் பதிவிட்டிருந்த மைக்கேல் வான் வயிற்றெரிச்சலுடன், “டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அல்ல” என்று வம்பிழுத்துள்ளார்.

  இங்கிலாந்து இனி இந்த டெஸ்ட் தொடரை வெல்ல வாய்ப்பில்லை, மான்செஸ்டரில் வென்று தொடரை வேண்டுமானாலும் ட்ரா செய்ய முடியும் ஆனால் இனி விராட் கோலி விடமாட்டார் என்றே தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Muthukumar
  First published: