பி.சி.சி.ஐ தலைவர் பொறுப்பு! சவுரவ் கங்குலி உருக்கம்

பி.சி.சி.ஐயின் தலைவராக சவுரவ் கங்குலியை நியமிக்கும் முடிவை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார்.

news18
Updated: October 14, 2019, 3:43 PM IST
பி.சி.சி.ஐ தலைவர் பொறுப்பு! சவுரவ் கங்குலி உருக்கம்
சவுரவ் கங்குலி
news18
Updated: October 14, 2019, 3:43 PM IST
பி.சி.சி.ஐயின் தலைவராக நியமிக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கான மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்களான கங்குலி மற்றும் பிரிஜேஷ் படேல் இடையே கடும் போட்டி நிலவியது.

இன்று பேசிய பி.சி.சி.ஐயின் இடைக்காலத் தலைவராக இருக்கும் சி.கே.கண்ணா, பி.சி.சி.ஐயின் தலைவராக சவுரவ் கங்குலியை நியமிக்கும் முடிவை வரவேற்கிறேன்’ என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய சவுரவ் கங்குலி, ‘பி.சி.சி.ஐக்கு தலைவராவது மிகவும் மகிழ்வானது.


பி.சி.சி.ஐயின் தலைவராக நான் பொறுப்பேற்கும் நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பி.சி.சி.ஐ நல்ல நிலையில் இல்லை. அதனுடைய மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஏதாவது நல்ல விஷயம் செய்வதற்கு சிறந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: October 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...