முகப்பு /செய்தி /விளையாட்டு / ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஸ்மிரிதி மந்தனா!

ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஸ்மிரிதி மந்தனா!

ஸ்மிரிதி மந்தனா

ஸ்மிரிதி மந்தனா

இதுவரை 47 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய உள்ள ஸ்மிரிதி மந்தனா 4 சதங்களை அடித்துள்ளார்.

  • Last Updated :

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா முதலிடம் பிடித்தார்.

இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-ஒரு நாள் மற்றும் 3-டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரிதி மந்தனா முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். முதல் ஒரு நாள் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா 105 ரன்களை எடுத்தார். இதேபோல் 2-வது ஒரு நாள் போட்டியில் 90 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Smrithi Mandhana, ICC Women's World T20, ஸ்மிருதி மந்தனா
(BCCI Women)

ஐசிசி தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் என அசத்திய ஸ்மிரிதி மந்தனா ஐசிசி தரவரிசையில் 3 புள்ளிகள் முன்னேறி 751 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தார்.

ஸ்மிரிதி மந்தனாவை அடுத்து ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2-ம் இடத்திலும், மெங் லானிங் 3-ம் இடத்திலும், நியூசிலாந்தின் எமி சாட்டர்வொயிட் 4-ம் இடத்திலும் உள்ளனர், இந்தியாவின் மிதாலி ராஜ் 5-ம் இடத்திலும் உள்ளார்.

இதுவரை 47 ஒரு நாள் போடிகளில் விளையாடிய உள்ள ஸ்மிரிதி மந்தனா 4 சதங்களை அடித்துள்ளார்

Also watch

First published:

Tags: Indian women cricket, Women Cricket