முகப்பு /செய்தி /விளையாட்டு / நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

நாங்களும் விளையாடுவோம்... பெண்கள் டி 20 தொடரில் 90 ரன்கள் விளாசிய மந்தனா

ஸ்மிரிதி மந்தனா

ஸ்மிரிதி மந்தனா

67 பந்துகளில் 90 ரன்கள் அடித்த ஸ்மிரிதி மந்தனா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மகளிருக்கான டி-20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரில், டிரெய்ல்பிளாசர்ஸ் (Trailblazers) அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மகளிர் ஐபிஎல் போட்டிக்கு முன்னோட்டமாக முதல் முறையாக இத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. டிரெய்ல்பிளாசர்ஸ் (Trailblazers), சூப்பர் நோவாஸ் (SuperNovas), வெலாசிட்டி (velocity) என 3 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

இந்தப்போட்டியில் டிரெய்ல்பிளாசர்ஸ் அணி, சூப்பர்நோவாஸ் அணியுடன் மோதியது. முதலில் ஆடிய டிரெய்ல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்ந்தது. அந்த அணியின் கேப்டன் மந்தனா 67 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம் 90 ரன்கள் விளாசினார்.

பின்னர், இலக்கை துரத்திய சூப்பர்நோவாஸ் அணி, சீராக ரன் சேர்த்தது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், கோஸ்வாமி வீசிய அந்த ஓவரை, ஹர்மன்பிரீத் கவுர் எதிர்கொண்டார். இவர், 5 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் தஹுஹு ரன் அவுட் ஆனதால், சூப்பர்நோவாஸ் அணி தோல்வியுற்றது.

ஆட்ட நாயகியாக ஸ்மிரிதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த போட்டி 8-ம் தேதி டிரெய்ல்பிளாசர்ஸ், வெலாசிட்டி அணிகளுக்கு இடையே நடக்கிறது.

Also watch

First published: